Search

வெயில் காலத்துல கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க! சம்மர் டிப்ஸ்!

 வெயில் காலத்தில நீர் இழப்பு, வயிறு பிரச்சனைகள், பாக்டீரியா தொற்று, வெப்ப பக்கவாதம் போன்ற உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வெயில் காலத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளா 5 டிப்ஸ் இதோ..

அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் : வெயில்காலத்தில் தண்ணீர் குடிப்பது என்பது உடலுக்கு அவசியமான ஒன்று. ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்

பருவகால பழங்களை சாப்பிடலாம் : அன்னாசிப்பழம்,மாம்பழம், தர்பூசணி, வெள்ளரிக்காய், லிச்சி, எலுமிச்சம் பழம் ஆகியவை வெயிலை சமாளிக்க உதவும் பழங்களாகும். தினசரி உணவில் பழங்களை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.

இலகுவான உணவுகளை உண்ணுங்கள்: வெப்பமான காலநிலையில் உங்கள் வயிறு உணவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே, உங்கள் செரிமான பாதை நன்றாக வேலை செய்ய இலகுவான உணவை உண்ணுங்கள்

குளிர்ச்சியான உணவுகளை உண்ணுங்கள்: சம்மர் என்றாலே ஞாபகம் வருவது ஐஸ்கிரீம் தான். இந்த நேரத்தில் உங்கள் உடலுக்கு குளிர்ச்சியான உணவுகள் தேவைப்படுகிறது. எனவே ஐஸ் கிரீம் அல்லது வீட்டிலேயே பழங்களால் செய்யக்கூடிய ஐஸ் பாப்களை (ice pop) சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க. 

ஃபிரஷ் ஜூஸ்களை குடிக்கலாம் : வெயில் காலத்தில் பருவகால பழங்களை ஃபிரஷ் ஜூஸாக எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment