Search

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு வெளியீடு!

 சமுதாயத்தில் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைப் பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு ' இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை' செயல்படுத்தி வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள்  பயனடைந்துள்ளனர். 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூபாய். 1.35 கோடி செலவில், 2,250 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில்,சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக, தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அமிர்த ஜோதி  தெரிவித்துள்ளார்.

20 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள், பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடம் இருந்து தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானச் சான்று ரூ.72,000க்குள் கீழ் இருக்க வேண்டும். 

இதற்கான விண்ணப்பப் படிவத்தை தென் சென்னை மாவட்ட சமூகநலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, 8வது தளம், இராஜாஜிசாலை, சென்னை- 01 அலுவலத்தில் இருந்து வாங்கி கொள்ளலாம்.  விண்ணப்பப் படிவத்தை பூரித்தி செய்து  இருப்பிடச் சான்று, ஆதார அட்டை, 2 புகைப்படம், வருமானச் சான்று, சாதிச் சான்று, வயதுச் சான்று ஆகிய சான்றுகள் இணைக்கப்பட்டு வரும் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment