பண்டைய கால மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உறுதுணையாக இருந்தது சிறு தானியங்கள் தான். காலம் மாற மாற மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரமும் மாற ஆரம்பித்ததினால் சிறு தானியங்களின் மவுசு குறைந்து மக்கள் அரிசி,கோதுமையை மிக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் பல்வேறு உடல் நல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிட்டது. இதன் விளைவு தான் இன்றைக்கு பண்டைய கால உணவுமுறைக்கு மக்கள் மாறத் தொடங்கி விட்டனர்.
அதற்கேற்றால் போல் தான் 2023-யை ஐக்கிய நாடுகள் சபை சிறுதானியங்களின் சர்வதேச ஆண்டாக அறிவித்த நிலையில், இந்தியாவும் இதை முன்மொழிந்தது. இந்நிலையில் தான் மக்கள் இந்த தனித்துவமான சிறுதானியங்களால் என்னென்ன நன்மைகள் மற்றும் எப்படியெல்லாம் உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக அமைகிறது என்பது குறித்து பரவலாக ஆராய தொடங்கி விட்டனர். சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கே நாமும் அறிந்து கொள்வோம்.
கம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு,சோளம், கொள்ளு போன்றவை சிறுதானியங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. மிகக்குறுகிய காலத்தில் மற்றும் வறட்சி நேரத்தில் வளரக்கூடியது. இதில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டசத்துகள் அதிகளவில் உள்ளது. இதோடு பல நோய்களுக்கும் மருந்தாக இவை அமைகிறது.
சிறுதானியங்களில் உள்ள புரோபயாடிக்குள் : பொதுவாக புரோபயாடிக்குள் என்பது செரிமான அமைப்பை திறம்பட வேலை செய்ய உதவும் ஒருவகை புரதம் ஆகும். இது சிறுதானியங்களில் அதிகளவில் உள்ளதால், நமது குடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமான பிரச்சனையின்றி வாழவும் உதவியாக உள்ளது. எடை இழப்பிற்கும் உறுதுணையாக உள்ளது.
நீரழிவு பிரச்சனைக்குத் தீர்வு : நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் குறைந்த கிளைசெமிக் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் திணை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
சிறுதானியத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை இருப்பதால், ரத்த குழாய்களில் கொழுப்புகள் சேராது. மேலும் ஒற்றை தலைவலி மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது.
உடல் பருமன் : சிறுதானியங்களில் நார்சத்து, கொழுப்பை கரைக்க உதவியாக உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி3 இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொலாஸ்டராலைக் குறைக்க உதவுகிறது. இதோடு சிறுதானியத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் காயங்களைக் குணப்படுத்தவும் உதவியாக உள்ளது.
இதுப்போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால்தான், சிறுதானியங்களை நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
No comments:
Post a Comment