ஆரோக்கியம் முக்கியம்.. ஜிங்க் சத்து கிடைக்க தவிர்க்க கூடாத உணவுகள்! - Agri Info

Adding Green to your Life

March 22, 2023

ஆரோக்கியம் முக்கியம்.. ஜிங்க் சத்து கிடைக்க தவிர்க்க கூடாத உணவுகள்!

 நமது உடலுக்கு தேவையான இன்றியமையாத ஊட்டச்சத்துக்களில் துத்தநாகமும் ஒன்றாகும். ஜிங்க் என அழைக்கப்படும் இது நமது உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை செய்கிறது. ஜிங்க் குறைபாடு ஏற்படும்போது இவை நமது உடலில் பல்வேறு விதமான பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும். எனவே தினசரி உணவில் துத்தநாகம் நிறைந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வது அவசியமாகும் அந்த வகையில் எந்தெந்த உணவு பொருட்களில் துத்தநாகம் அதிக அளவு உள்ளது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

ஷெல் மீன் : ஷெல் மீன்களில் துத்தநாகம் அதிக அளவு நிறைந்துள்ளது. இதில் உடலுக்கு தேவையான புரத சத்தும் மட்டுமின்றி மற்றும் பல ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.

இறைச்சி : உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் புரதச்சத்தையும் அளிப்பதில் இறைச்சி முக்கியத்துவம் வாய்ந்த உணவுப் பொருளாக இருந்து வருகிறது. முக்கியமாக இதில் துத்தநாகம் அதிக அளவில் நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விதைகள் : பப்பாளி விதைகள், எள் விதைகள் ஆகியவற்றின் நமது உடலுக்கு தேவையான துத்தநாகம் அதிக அளவில் நிறைந்துள்ளது மேலும் இதைத் தவிர நார்ச்சத்தும் மேலும் பல தாது பொருட்களும் இவற்றில் நிறைந்துள்ளன. நமது தினசரி உணவிலோ அல்லது நொறுக்கு தீனியாகவோ இவற்றை நாம் உட்கொள்ளலாம்.

வேர்கடலைகள் : வேர்க்கடலை என அழைக்கப்படும் இந்த நிலக்கடலைகளில் நமது உடலுக்கு தேவையான துத்தநாகம் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இவை குழந்தைகளுக்கும் அதிகம் பிடித்த ஒரு நொறுக்கு தீனியாக இருப்பதால் விதவிதமான முறைகளில் நாம் இவற்றை தயார் செய்து அவர்களுக்கு கொடுக்கலாம்.

பருப்பு வகைகள் : சுண்டல், பீன்ஸ் மற்றும் பல பருப்பு வகைகளில் நமது உடலுக்கு தினசரி தேவைப்படும் அளவில் பத்து சதவீதத்திற்கும் அதிகமான துத்தநாகம் நிறைந்துள்ளது. எனவே முடிந்த அளவு நமது உணவில் இந்த பருப்பு வகைகளையும் சுண்டல் பீன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

முட்டைகள் : முட்டைகளில் துத்தநாகம் மட்டுமின்றி புரதம் வைட்டமின்கள் என பல்வேறு விதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு முட்டை ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. மேலும் முட்டைகளை நாம் விதவிதமான முறைகளில் சமைத்து உண்ணலாம் என்பதால் இவை குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.

துத்தநாகத்தின் பயன்கள் : நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும் துத்தநாகம் தான் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடலில் உண்டாகும் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்துவதற்கும் துத்தநாகம் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.

இதைத் தவிர நமது உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் காயத்தை விரைவில் குணமாக்க துத்தநாகம் உதவுகிறது. மேலும் வயதாவதால் ஏற்படும் முதிர்ச்சியான தோற்றத்தை தடுத்து, எப்போதும் இளமையாக காட்சி அளிப்பதற்கு துத்தநாகம் உதவுகிறது.

அடிக்கடி தலைமுடி உதிர்வை பிரச்சனை சந்திக்கும் நபர்களுக்கு உடலில் துத்தநாக குறைபாடு இருக்கும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு துத்தநாகம் முக்கியமானது ஆகும். இதைத் தவிர உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி சீராக வைப்பதற்கு துத்தநாகம் அவசியமாகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment