கரும்பு சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்: கரும்பு சாறு மிகவும் சுவையானது. கோடை காலம் வர உள்ளதால் அடுத்த சில வாரங்களில் கரும்பு சாறு மக்கள் அதிகம் உட்கொள்ளும் பானங்களில் ஒன்றாகிவிடும். வெப்பமான கோடை காலத்தில் ஒரு கிளாஸ் கரும்பு சாறு மக்களுக்கு உடனடியாக புத்துணர்ச்சி அளிக்கும். கரும்பு சாறு இயற்கையானது. இதில் பல விதமான இயற்கையான சத்துக்கள் உள்ளன. இந்த சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
கரும்புச்சாறு பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஜூஸ் நம் உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது. கரும்பு சாற்றின் பல வித நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கரும்பில் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ளன. இது செல்களை சேதப்படுத்தும் மூலக்கூறுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்த மூலக்கூறுகள் நீரிழிவு, மலேரியா, மாரடைப்பு மற்றும் தோல் புற்றுநோய் போன்ற பல பிரச்சனைகளை அதிகரிக்கும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக கரும்பு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
கரும்பில் உள்ள கூறுகள் உடல் அழற்சி, மஞ்சள் காமாலை, இரத்தப்போக்கு மற்றும் சிறுநீர் பாதை பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவியாக இருக்கும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்த சாறு நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டது.
கரும்பு சாற்றின் 3 முக்கிய நன்மைகள்
- கரும்பு சாறு குடிப்பதால் உடனடி ஆற்றல் கிடைக்கும். உடலில் உள்ள ஆற்றலின் முதன்மை ஆதாரம் குளுக்கோஸ் ஆகும். இது சர்க்கரை உடைக்கப்படும் போது உருவாகிறது. கரும்புச் சாற்றில் உள்ள சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது. நீங்கள் சோர்வாக உணர்ந்தால், ஒரு கிளாஸ் கரும்புச் சாறு உங்களுக்கு தேவையான ஆற்றலைத் தரும்.
- நம் உடலில் அதிகப்படியான குளுக்கோஸ் இருந்தால், உடல் கூடுதல் சக்தியை கிளைகோஜன் வடிவத்தில் சேமிக்கிறது. இந்த ஆற்றல் தசை செல்கள் மற்றும் கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. உடலில் இரத்தச் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்போது, கல்லீரல், சேமிக்கப்பட்ட குளுக்கோஸை இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது.
- கரும்புச் சாற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலில் செரோடோனின் ஹார்மோனைத் தூண்டுகிறது. இதனால் உங்கள் மனநிலையை புத்துணர்ச்சி அடைகிறது. உங்கள் உடலில் செரோடோனின் அளவு குறையும் போது, சர்க்கரைக்கான ஏக்கம் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், கரும்பு சாறு உங்கள் மனநிலையை மேம்படுத்தும்.
இந்த நபர்கள் கரும்புச் சாற்றை தவிர்க்கலாம்
கரும்பு சாறு மிகவும் இனிமையான சுவை கொண்டது. ஆகையால், மக்கள் அதை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்புச் சாற்றைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய நோயாளிகள் கரும்பு சாறு குடிப்பதற்கு முன் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இது தவிர உடல் பருமன் மற்றும் அதிக எடை உள்ளவர்களும் கரும்பு சாறு குறைவாக குடிக்க வேண்டும்.
Click here for more Health Tip
Click here to join whatsapp group for daily health tip
No comments:
Post a Comment