பாலை விட தயிர் சிறந்ததா? - Agri Info

Adding Green to your Life

March 20, 2023

பாலை விட தயிர் சிறந்ததா?

 பாலைவிட தயிர் பலமடங்கு சிறப்பானது, ஆரோக்கியம் நிறைந்தது. ஆம்...! தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். 

தயிர் குளிர்ச்சியானது மட்டுமல்ல, நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியதாகும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில், 32 சதவீதம் பால்தான் ஜீரணமாகும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில்91 சதவீதம் ஜீரணிக்கப்பட்டுவிடும். 

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரித்து, நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. எனவே தான் வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தயிரை தினமும் உணவின் ஒரு அங்கமாக சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக தயிரில் வைட்டமின் பி-12, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் தாது உப்புகள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும். தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை தயிர் கட்டுப்படுத்துகிறது. தயிரில் வைட்டமின் பி-12, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் தாது உப்புகள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.

எப்போது, எதனுடன் சேர்த்து சாப்பிடுவது? தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதியம். 

இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும். 

கோடை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாம். தயிருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண், பல் வலி குணமாகும். காரணம், இதில் ஆன்டிபாக்டீரியல் தன்மைகள் ஏராளமான அளவில் உள்ளன. 

தயிருடன் ஓமம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையில் இருந்து விடுபடலாம். தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். இது சிறுநீரக பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும். தயிருடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியாக்கள், பெப்ரைன் ஆகியவை மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சினையில் இருந்து விடுவிக்கும். 

தயிர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் மூட்டு வலியைக் குறைக்க உதவும். இதில் வைட்டமின்-சி அதிகம் உள்ளதால், முதுமையையும் தடுக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment