தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை ஆகிய மாவட்டங்களுக்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வளாகத்திலுள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் மார்ச் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஒருங் கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன், தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்ஸில் பணிபுரிய ஓட்டுதர்கள் மற்றும் மருத் துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் தஞ்சாவூர் மருத் துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் மார்ச் 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், ஓட்டுநருக்கான பணியில்சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதா ரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந் தபட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதி யமாக ரூ. 15 ஆயிரத்து 235 வழங்கப்ப டும். எழுத்து தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத்துறைநேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்து வம் தொடர்பான தேர்வு சாலை விதி களுக்கான தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.
அனைத்திலும்தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாள்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங் கும் வசதி செய்து தரப்படும். இதேபோல மருத்துவ உதவியாள ருக்கான தகுதிகள் பி.எஸ்சி. நர்சிங், பிளஸ் 2 படிப்புக்கு பிறகு ஜி.என். எம். ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. படிப்புகள் இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். அல்லது உயிர்அறி வியல், பி.எஸ்சி. விலங்கியல், தாவரவி யல், உயிரியல், வேதியியல், நுண்ணுரி யியல், உயிரி தொழில்நுட்பம் ஆகிய வற்றில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாதம் ஊதியம் ரூ. 15 ஆயிரத்து 435 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அன்று 19 வயதுக்கு மேலும் 30 வய துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி, மனிதவளத் துறை யின் நேர்முகத் தேர்வு ஆகிய முறையில் தேர்வு நடைபெறும்.
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப் பட்டவர்கள் 50 நாள்களுக்கு முழு மையான வகுப்பறை பயிற்சி, மருத் துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப் படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும் விவரங்க ளுக்கு 7397701807 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
Click here for latest employment news
No comments:
Post a Comment