நல்ல இதய ஆரோக்கியத்தை பேணுவது என்பது தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகள் இதய ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழத்துகினற்ன. ஆரோக்கியமான செல்களை உருவாக்க நம் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவை. ஆனால் உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தால் அது இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்க செய்கிறது.
அதிக கொலஸ்ட்ரால் மூலம் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகள் உருவாக்கலாம். இறுதியில் கொழுப்பு அதாவது கொலஸ்ட்ரால் டெப்பாசிட்கள் வளர்ந்து, தமனிகள் வழியே போதுமான ரத்தம் பாயும் செலயல்முறைக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் கொலஸ்ட்ரால் டெப்பாசிட்கள் திடீரென உடைந்து மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தும் ஒரு க்ளாட்டை உருவாக்கலாம்.
கொலஸ்ட்ரால் என்பது நம் ரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது உடலில் பல முக்கிய பாத்திரங்களை வகிக்கிறது. இவற்றில் ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் D ஆகியவை அடங்கும். நாம் உண்ணும் இறைச்சி மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட பல உணவுகளில் கொலஸ்ட்ரால் காணப்பட்டாலும் இது நம் கல்லீரலாலும் உருவாக்கப்படுகிறது. நம் உடல் சரியாக வேலை செய்ய போதுமான அளவு கொலஸ்ட்ரால் தேவை தான். ஆனால் நம் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கொஞ்சமாக இல்லாமல் அல்லது போதுமானதை விட அதிகமாக இருந்தால் கரோனரி தமனி நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகம்.
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது பரம்பரையாக கூட வரலாம் என்றாலும் இது பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகளின் விளைவாக இருப்பதை நிபுணர்கள் சுட்டி காட்டுகின்றனர். ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சில நேரங்களில் மருந்துகள் அதிக கொழுப்பைக் குறைக்க உதவும். நம் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை உணர்த்தும் வெளிப்படையான அறிகுறிகள் என்று எதுவும் இல்லை. பெரும்பாலும் ரத்தப் பரிசோதனை மூலமே அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா என்பதை கண்டறிய முடிகிறது.
கொலஸ்ட்ரால் அளவுகளால் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய 9 -11 வயதிற்குள் முதல் முறை கொலஸ்ட்ரால் ஸ்கிரீனிங் செய்வது என்பது நேஷ்னல் ஹார்ட், லங் மற்றும் பிளட் இன்ஸ்ட்டிடீயூட்டின் (NHLBI) பரிந்துரை. அதன் பிறகு ஒவ்வொரு 3 - 5 வருடங்களுக்கு ஒருமுறை உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை டெஸ்ட் செய்து கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது. அதே போல 45 - 65 வயதுடைய ஆண்களும், 55 - 65 வயது வரையிலான பெண்களும் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டு தோறும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என NHLBI பரிந்துரைக்கிறது.
வகை:
பொதுவாக கொலஸ்ட்ரால் ரத்தத்தின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. புரதங்கள் மற்றும் கொலஸ்ட்ராலின் இந்த கலவை லிப்போபுரோட்டீன் (lipoprotein) என்று அழைக்கப்படுகிறது. லிப்போபுரோட்டீன் எதை கொண்டு செல்கிறது என்பதைப் பொறுத்து 2 வகையான கொலஸ்ட்ரால்கள் உள்ளன. அவை:
குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL -Low-density lipoprotein):
இந்த LDL "கெட்ட" கொலஸ்ட்ரால் ஆகும். இது நம் உடல் முழுவதும் கொலஸ்ட்ரால் துகள்களை கடத்துகிறது. எல்டிஎல் கொலஸ்ட்ரால் தமனிகளில் சுவர்களை கட்டமைத்து, அவற்றை கடினமாகவும் குறுகலாகவும் ஆக்குகிறது. அதிக அளவு LDLகொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL - High-density lipoprotein):
இந்த HDL, "நல்ல" கொலஸ்ட்ரால் ஆகும். உடலில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை உங்கள் கல்லீரலுக்கு எடுத்து செல்கிறது. அதாவது HDL கொலஸ்ட்ராலை உறிஞ்சி கல்லீரலுக்கு மீண்டும் கொண்டு செல்கிறது. கல்லீரல் அதை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. உடலில் அதிக அளவு HDL கொலஸ்ட்ரால் இருப்பது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. ஒட்டுமொத்தமாக குறைந்த HDL கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு அதிக HDL அளவு உள்ளவர்களை விட இதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்.
பொதுவாக ஒரு ஆணின் கொலஸ்ட்ரால் அளவு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது, மேலும் பெண்ணின் கொலஸ்ட்ரால் அளவு மாதவிடாய் நின்ற பிறகு அதிகரிக்கிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் கூற்றின்படி, கீழே இருக்கும் அளவீடுகளின் படி வயதுக்கு ஏற்ப ஆரோக்கியமான கொழுப்பின் அளவைக் காட்டுகிறது. ஒரு டெசிலிட்டருக்கு (mg/dl) மில்லிகிராமில் கொலஸ்ட்ராலை மருத்துவர்கள் அளவிடுகின்றனர்.
HDL மற்றும் LDL-க்கான இயல்பான ரேஞ்ச் என்ன?
ஒரு சிறந்த LDL கொலஸ்ட்ரால் அளவு 70 mg/dl-க்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும் ஒரு பெண்ணின் HDL கொலஸ்ட்ரால் அளவு 50 mg/dl க்கு அருகில் இருக்க வேண்டும். ட்ரைகிளிசரைடுகள் 150 mg/dl-க்கும் குறைவாக இருக்க வேண்டும். மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mg/dl-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
குறிப்பாக HDL கொலஸ்ட்ராலின் உகந்த அளவுகள் என்ன?
60 mg/dl- இருப்பது சிறந்தது. ஆண்களுக்கு HDL கொலஸ்ட்ராலின் அளவு 40 mg/dl- அல்லது அதற்கும் அதிகம் இருப்பது மற்றும் பெண்களுக்கு 50 mg/dl- அல்லது அதற்கு மேற்பட்டடு இருப்பது ஏற்று கொள்ளத்தக்கது. ஆண்களுக்கு 40 mg/dl-க்கும் கீழ் இருப்பதும், பெண்களுக்கு HDL கொலஸ்ட்ராலின் அளவு 50-க்கும் கீழ் இருப்பதும் குறைவான HDL கொலஸ்ட்ரால் அளவாக நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்க வேண்டிய கொலஸ்ட்ராலின் அளவு வழிகாட்டுதல்கள் ஒரே மாதிரியாக இருக்கும், இருப்பினும் மேலே பார்த்தபடி, HDL கொலஸ்ட்ரால் என்று வரும் போது அவை வேறுபடுகின்றன. ஆண்களை விட பெண்கள் அதிக அளவு HDL கொலஸ்ட்ராலை உடலில் தக்க வைப்பதை இலக்காக கொள்ள வேண்டும்.
குழந்தைகளில் கொலஸ்ட்ரால் அளவு..
நீரிழிவு, உடல் பருமன் அல்லது அதிக கொலஸ்ட்ரால் இருக்கும் குடும்ப வரலாறு போன்ற அதிக ஆபத்து காரணிகளை கொண்ட குழந்தைகள் 2 - 8 வயது வரையிலும், மீண்டும் 12 -16 வயது வரையிலும் கொலஸ்ட்ரால் டெஸ்ட்களுக்கு உட்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு இருக்க வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட HDL கொலஸ்ட்ரால் அளவு என்பது 45 mg/dl-க்கும் மேல் ஆகும். குழந்தைகளில் 40 mg/dl - 45 mg/dl அளவு HDL கொலஸ்ட்ரால் இருப்பது பார்டர் லைன் ஆகும். 40 mg/dl-க்கும் குறைந்த HDL கொலஸ்ட்ரால் அளவை கொண்டிருப்பது குழந்தைகளுக்கு மிகவும் குறைவான HDL கொலஸ்ட்ரால் இருப்பதை குறிக்கிறது.
0 Comments:
Post a Comment