வேலை மற்றும் படிப்பில் கவனம் ரொம்ப சிதறுதா.? இனி இதை செஞ்சு பாருங்க! - Agri Info

Adding Green to your Life

March 18, 2023

வேலை மற்றும் படிப்பில் கவனம் ரொம்ப சிதறுதா.? இனி இதை செஞ்சு பாருங்க!

 தனிப்பட்ட வாழ்க்கை முறையோ, அலுவலக சம்பந்தப்பட்ட வேலையோ அல்லது தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளையோ சிறப்பாக செய்து முடிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வழியை பின்பற்றி வருகின்றனர். அதே சமயம் தனிப்பட்ட வாழ்க்கையும் - அலுவலக வேலைகளையும் சமாளிப்பதற்குள் பலருக்கும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்..

இவ்வாறு மன அழுத்தம் இன்றி ஒரு வேலையை சிறப்பாக செய்து முடிக்க பயன்படுத்தப்படும் ஒரு உத்தி தான் “பொமோடோரோ உத்தி” ஆகும். இந்த முறையை பயன்படுத்தி நாம் வேலை செய்யும் போது கணிசமான அளவில் நேரம் சேமிக்க முடிவதுடன் நாம் எடுத்த வேலையையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். அதிலும் குறிப்பாக வேலை நேரங்களின்போது அவ்வபோது கவன சிதறலால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த முறை அதிகம் கைகொடுக்கும்.

அது என்ன பொமோடோரோ உத்தி அது எப்படி கடைப்பிடிப்பது? : அதாவது முதலில் நீங்கள் செய்யப் போகும் வேலையை முடிவு செய்து கொள்ள வேண்டும். அது உங்கள் அலுவலக வேலையாகவும், தொழில் சம்பந்தப்பட்டதாகவும் அல்லது வீட்டு வேலையாக கூட இருக்கலாம். பிறகு அடுத்த 25 நிமிடங்களுக்கு எந்த வித கவன சிதறல்களிலும் ஈடுபடாமல் உங்களது முழு கவனத்தையும் அந்த வேலையின் மீது வைத்து செயல்பட வேண்டும். 25 நிமிடங்கள் முடிந்தவுடன் 5 நிமிடங்கள் வரை இடைவேளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த இடைவெளி நேரத்தில் டீ குடிப்பது, வாக்கிங் செல்வது, பிடித்தவர்களுடன் பேசுவது ஆகிய வேலைகளை வைத்துக் கொள்ளலாம். இது ஒரு செட் ஆகும்.. இவ்வாறு நான்கு செட்கள் செய்து முடித்த பிறகு 15 இலிருந்து 30 நிமிடங்கள் வரை மீண்டும் இடைவேளை எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் இதைத்தான் பொமோடோரோ உத்தி என்று கூறுகிறார்கள்.

என்ன பயன் ? : 1980-களில் பெரிய வேலைகளை செய்து முடிப்பதற்கு மிகச்சிறந்த உத்தியாக இந்த பொமோடோரோ முறை கடைப்பிடிக்கப்பட்டது. எந்தவித சிறப்பு முன்னேற்பாடுகளும் இல்லாமல் மிக எளிதாக செய்ய முடிவதால் பலரும் இந்த முறையை கடைப்பிடிக்க துவங்கினார்கள். முக்கியமாக மிகப்பெரிய வேலைகளை செய்வதற்கு தான் இந்த முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வேலை சிறிதாக இருப்பின் வழக்கத்தை விட சிறப்பாகவும் குறுகிய நேரத்திலும் நம்மால் செய்து முடிக்க முடியும்.

யாரெல்லாம் இந்த உத்தியை பின்பற்றலாம்..?  : யாருக்கெல்லாம் அவ்வபோது கவனசிதறல் ஏற்பட்டு தொடர்ந்து ஒரு வேலையை செய்ய முடியாதோ அவர்கள் எல்லாம் இந்த முறையை பின்பற்றலாம். மேலும் நீண்ட காலமாக கிடப்பிலிருந்த வேலைகளை செய்து முடிக்க அலுவலக நேரம் போக மீதி நேரத்திலும் வேலை செய்பவர்களும் வரும் இந்த முறையை பின்பற்றலாம். எழுத்தாளர்கள், வலை பக்கத்திற்கான ஆராய்ச்சி செய்பவர்கள் ஆகியோர்களுக்கும் இந்த முறை ஏற்றது.

எப்படி உருவானது இந்த முறை..? : முதன் முதலில் பிரான்சிஸகோ சிரிலோ என்ற பல்கலைக்கழக மாணவனால் இந்த முறை உருவாக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவெனில் அந்த மாணவருக்கு தனது பாடங்களை படிக்கும் போது அதிகப்படியான கவனச் சிதறல்கள் ஏற்பட்டு தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து முடிக்க முடியாத நிலை இருந்தது. இதை சரி செய்ய தொடர்ந்து பத்து நிமிடங்கள் வரை கவன சிதறல் இல்லாமல் படிக்க அவர் முயற்சித்தார். இவ்வாறு படிக்கும்போது நேரத்தை கணக்கீடு செய்ய தக்காளியின் வடிவத்தில் இருந்த ஒரு கிச்சன் டைமரை அவர் பயன்படுத்தினார். அதுவே நாளடைவில் பொமோடோரோ உத்தி என்று ஆனது. இத்தாலிய மொழியில் பொமோடோரோ என்றால் தக்காளி என்று பெயராம்.


No comments:

Post a Comment