உலர் திராட்சை நீர்: இதில் உள்ள நன்மைகள் உங்களை வியக்க வைக்கும்!! - Agri Info

Adding Green to your Life

March 31, 2023

உலர் திராட்சை நீர்: இதில் உள்ள நன்மைகள் உங்களை வியக்க வைக்கும்!!

உலர் திராட்சையின் சுவை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அவ்வப்போது சில உலர் திராட்சைகளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு அதன் சுவையை ரசிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கும். இதை பெரும்பாலும் நாம் அப்படியே பச்சையாக உட்கொள்கிறோம். பல வித உணவு வகைகளில் இதை நாம் பயன்படுத்துகிறோம். இனிப்பு வகைகள் முதல், புலாவ் வரை இதை அனைத்திலும் நாம் பயன்படுத்துகிறோம். உலர் திராட்சையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் பல விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், உலர் திராட்சை நீரிலும் இதே அளவு நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

உலர் திராட்சை நீர்

நீங்கள் எப்போதாவது திராட்சை தண்ணீரை ருசித்ததுண்டா? அப்படி செய்திருந்தால், அதன் சுவையையும் நீங்கள் எப்போதும் மறக்க மாட்டீர்கள். சுவை மட்டுமல்லாமல், இதிலும் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. 

திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

திராட்சைப்பழத்தில் சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் தாமிரம் ஆகியவை இதில் நிறைந்துள்ளன. பல உணவியல் வல்லுநர்கள் இதை ஊறவைத்து சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இது மன ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவாகக் கருதப்படுகிறது, அத்துடன் உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

திராட்சை தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இன்றைய காலகட்டத்தில் வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆகையால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் முக்கியம். திராட்சை நீர் வைரஸ் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதன் காரணமாக நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன.

உடல் நச்சு நீங்கும்

உடலில் நச்சுப் பொருட்கள் அதிகமாகக் குவிந்தால், பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து உலர் திராட்சை தண்ணீர் குடிப்பவர்களின் உடலில் உள்ள நச்சுக்கள் அவ்வப்போது வெளியேறும். மேலும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உலர் திராட்சை நீர் உதவுகிறது.

உலர் திராட்சை தண்ணீர் தயாரிப்பது எப்படி?

உலர் திராட்சை தண்ணீர் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இப்போது அதில் திராட்சையை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் தூங்கி எழுந்தவுடன் வடிகட்டி வெறும் வயிற்றில் இதை குடிக்கவும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment