தேர்வு பயத்தினால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி..? - Agri Info

Adding Green to your Life

March 11, 2023

தேர்வு பயத்தினால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி..?

 

மாணவர்கள் அனைவரும் தங்களது ஆண்டு இறுதி தேர்வுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த சமயத்தில் தேர்வுகளை நினைத்து பல்வேறு மாணவர்களும் அதிக அளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சமயத்தில் தூங்காமல் கண் விழித்து படிப்பதும் சரியான உணவு பழக்கங்களை கடைபிடிக்காமல் இருப்பதும் நம் உடலுக்கு பல்வேறுவது பாதிப்புகளை உண்டாக்கும். முக்கியமாக இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதால் அவை நமது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றன. இதைப் பற்றி வல்லுனர்கள் கூறுகையில், தேர்வுகளின் போது உண்டாகும் “எக்ஸாம் ஸ்டிரஸ்” என்பது நம் அனைவருக்கும் உண்டாகக்கூடிய ஒரு விதமான மன அழுத்தம் தான். நம்மில் அனைவருமே இதனை கடந்து தான் வந்திருக்கிறோம்.

இந்த தேர்வு பயத்தையும், தேர்வினால் உண்டாகும் மன அழுத்தத்தையும் சில எளிய முறைகளை பின்பற்றுவதன் மூலம் தவிர்க்கலாம் என்று கூறுகிறார்கள்.

எளிதான திட்டமிடல்: நம் என்னென்ன பாடங்களை எப்போது படிக்க வேண்டும் என்பதை பற்றி திட்டங்களை முன்கூட்டியே வகுத்து அதன்படி நேர அட்டவனையை அமைக்க வேண்டும். முக்கியமாக மிகக் கடினமான பாடங்களை கடைசியாக படிக்கலாம் என்று நினைப்பதற்கு பதிலாக முதலிலேயே அவற்றை படித்து முடித்து விடுவதன் மூலம் கடைசி நேரத்தில் எளிதான பாடங்களை விரைவாக நாம் படித்து முடித்து விடலாம்.

இடைவெளி எடுத்துக் கொள்வது: நீண்ட நேரம் படிக்கும்போது அவ்வபோது தேவையான அளவு இடைவேளை எடுத்துக் கொள்வது நமது உடலையும் உடலையும் ரிலாக்சாக வைத்திருக்க உதவும். இந்த இடைவேளை நேரங்களில் உடற்பயிற்சி செய்வது, தியானம் செய்வது போன்ற மனதிற்கு இதமான மகிழ்ச்சி தரும் செயல்களை செய்யலாம்.

உதவியை நாடுவது: மாணவர்கள் தங்களைப் பற்றி விமர்சனம் செய்பவர்களை உடன் வைத்திருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் வெறுமனே உங்களை குறை கூறுபவர்களாக மட்டுமே அல்லாமல், உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி அதிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ள உதவுபவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்களிடம் உள்ள குறைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கு உதவும்.

பாட புத்தகங்களை சரியாக வைப்பது: உங்களது படிப்பு சம்பந்தப்பட்ட புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை சரியான இடத்தில் அடுக்கி வைப்பது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் எந்தெந்த பாடத்திற்கான புத்தகங்கள் எங்கெங்கு உள்ளன என்பதும், கடைசி நேரத்தில் ஏற்படும் தேவையற்ற பதட்டங்களையும் தவிர்க்க இது உதவும்.

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்: முடிந்த அளவு உடல் இயக்கத்தை அதிகரிக்க கூடிய விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபடுவது அவர்களது மனதையும் உடலையும் மகிழ்ச்சியாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும்.

இவை அனைத்திற்கும் மேல் மாணவர்கள தங்களுக்கு தேர்வினால் உண்டாகும் இந்த மன அழுத்தமானது மிக சாதாரணமானது என்பதை உணர வேண்டும். அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு சந்தோஷங்களை தவறாமல் அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment