இந்திய விமானப்படையில் சேர அரிய வாய்ப்பு.. திண்டுக்கல் இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க! - Agri Info

Adding Green to your Life

March 31, 2023

இந்திய விமானப்படையில் சேர அரிய வாய்ப்பு.. திண்டுக்கல் இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க!

 இந்திய விமானப் படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இந்திய விமானப் படையில் 2023-24ம் ஆண்டில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்கான வயது வரம்பு 26.12.2002 முதல் 26.06.2006-க்குள் பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களாக இருத்தல் வேண்டும். 31.03.2023ம் தேதி வரை agnipathvayu.cdac.inவழியாக விண்ணப்பிக்கலாம் . இதற்கான இணையவழி தேர்வு 10.05.2023 அன்று நடத்தப்படும்.

மேலும், கல்வித்தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ விளம்பர அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . உடல் தகுதியைப் பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டி மீட்டர் உயரமும் பெண்கள் 152 சென்டி மீட்டர் உயரமும் இருக்க வேண்டும். இத்தேர்வானது எழுத்துத் தேர்வு உடற்தகுதித்தேர்வு, மருத்துவப் . பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது. அக்னி வீரர் திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு சுமார் 50.000 முதல் 60,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இத்தேர்விற்கு பெருமளவில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment