இன்றைக்கு ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தாத நபர்களை உங்கள் கண் எதிரில் நீங்கள் கண்டுவிட்டால் அது ஆச்சரியம் தான். அதுவும் கொரோனா ஊரடங்கு முடக்க காலத்தில் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க தொடங்கியதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் கூட பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் வாங்கி கொடுக்கப்பட்டன.
இளையவர்கள் வெறுமனே கேம் விளையாடுவதாக பெரியவர்கள் சாட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்லைன் கல்வி, வேலைக்கான தகவல் தொடர்பு, இண்டர்நெட் இணைப்பு, வீடியோ காலிங் வசதி, பேங்கிங் சேவைகள் நம் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாக ஸ்மார்ட்ஃபோன் மாறி விட்டது. இந்த தேவைகள் எதுவுமே இல்லை என்றாலும், அடிப்படை கல்வியறிவு கொண்ட எல்லோரிடமும் சாதாரண ஃபோன் ஒன்றாவது இருக்கிறது.
இதய பாதிப்பு ஏற்படுமா?
எல்லாம் சரி தான், ஃபோனை நாம் எங்கே வைத்துக் கொள்கிறோம். சட்டைப் பையில் அல்லது ஃபேண்ட் பையில். அதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஆனால், சட்டப்பையில் வைத்தால் இதய நலன் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் நமக்கு உண்டு. அதுபோல ஃபேண்ட் பாக்கெட்டில் வைத்தால் கருத்தரிக்கும் திறன் பாதிக்கலாம் என்ற அச்சம் உண்டு.
சொல்லப்போனால் இரண்டுமே சரி தான். அப்படியென்றால் ஃபோனை எங்கே வைத்துக் கொள்வது, இதன் விளைவுகள் என்ன என்பதை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
வீட்டிலும் ஃபோனும், கையுமாக
ஃபோனில் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட வேலை நிமித்தமான தேவைகள் முடிந்து விட்டாலும் கூட, அதை எப்போதும் கையில் பிடித்துக் கொண்டு எதையாவது ஸ்க்ரோல் செய்வது தவிர்க்க இயலாத பழக்கமாக மாறி விட்டது. முடிந்த வரை சமூக வலைதளங்களை லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது நல்லது. வெளியிடங்களுக்கு செல்லும்போது மட்டும் செல்ஃபோனில் உபயோகிக்கலாம்.
கழிவறை வரை வந்து செல்ஃபோன் பயன்பாடு
இப்போதெல்லாம் கழிவறைக்கு செல்பவர்கள் கையில் ஃபோன் இல்லாமல் செல்வதில்லை. அங்கே அமர்ந்து கொண்டு ஸ்டேட்டஸ் பார்ப்பது அல்லது வயர்லெஸ் ஹெட்ஃபோனுடன் இணைத்துவிட்டு பேசிக் கொண்டிருப்பது போன்றவை தொடர்கிறது. ஆனால், இவ்வாறு வயர்லெஸ் கருவியுடன் இணைப்பதால் கதிர்வீச்சு 2 முதல் 7 மடங்கு கூடுதலாக இருக்குமாம். அதுவே புற்றுநோயை வரவைக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
ஃபேண்ட் பாக்கெட்டில் வைப்பதால்....
செல்ஃபோனை ஃபேண்ட் பாக்கெட்டில் வைப்பதால் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படும் என்பது மட்டுமல்லாமல், கதிர்வீச்சானது எலும்புகளை வலுவிழக்கச் செய்யுமாம். அதிலும் இடுப்பு எலும்புகள் வலுவிழப்பதை தவிர்க்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எங்குதான் வைப்பது?
செல்ஃபோன் பயன்பாட்டை தவிர்க்கவும் முடியாது, அதை பாக்கெட்டுகளிலும் வைக்க கூடாது என்றால், பிறகு அதை எங்குதான் வைத்துக் கொள்வது என்று சலிப்பு தட்டுகிறதா? உங்கள் பின் பாக்கெட்டில் இதை வைத்துக் கொள்ளலாம். ஆனால், மறந்தும்கூட அப்படியே உட்கார்ந்து விட வேண்டாம்.
கார்களில் பயணிக்கும்போது முன்பக்க டிராயரில் வைத்து விடலாம். அலுவலகத்திற்கு பயணிக்கும்போது நம் கையில் உள்ள பைகளில் வைத்துக் கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment