Search

பீட்ரூட் ஜூஸ் அருந்துவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? இந்த சம்மருக்கு ஏற்ற ட்ரிங்க்..!


வெயில் காலம் தொடங்கியுள்ளதையடுத்து நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ளவும், தாகம் தணித்துக் கொள்ளவும் நாம் வெவ்வேறு விதமான ஜூஸ்களை தினந்தோறும் அருந்தி வருகிறோம். சாதாரணமாக கோடை காலங்களில் சாலையோரக் கடைகளில் கிடைக்க கூடிய கரும்பு ஜூஸ், இளநீர், நுங்கு பதநீர், தர்பூசணி, சாத்துக்குடி ஜூஸ் போன்றவை தான் நம்முடைய முதன்மையான தேர்வுகளாக இருக்கும். 


ஆனால், நிச்சயமாக நீங்கள் சாலையோரக் கடைகளில் அல்லது ஜூஸ் கடைகளிலும் கூட பீட்ரூட் ஜூஸ் விற்பனை செய்யப்படுவதை பார்த்திருக்க மாட்டீர்கள். ஆக, பீட்ரூட்டிலும் கூட ஜூஸ் அடித்து குடிக்க முடியும் என்பதோ, அதன் மூலமாக கிடைக்கும் பலன்கள் குறித்தோ நமக்கு தெரிந்திருக்காது. வெளியிடங்களில் கிடைக்காவிட்டாலும் நம் வீட்டிலேயே பீட்ரூட் ஜூஸ் தயாரித்து அருந்தலாம். இதன் மூலமாக என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்தச் செய்தியில் இப்போது பார்க்கலாம்.

சருமத்திற்கு நல்லது : நமது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் பீட்ரூட்டில் உள்ளது. ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்து, விட்டமின் சி போன்றவை பீட்ரூட்டில் நிறைந்துள்ளன. இது சரும பாதிப்பை தடுத்து, முடி உதிர்வை நிறுத்தும். பீட்ரூட் சாறு அருந்துவதால் நமது அழகுத் தோற்றமும் மேம்படும்.

நம் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செல்களை பீட்ரூட்டின் விட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துக்கள் தடுத்து நிறுத்தும். சருமத்தில் ஏற்படக் கூடிய சுருக்கம், கரு வளையங்கள் மற்றும் இதர வயது முதிர்வு அறிகுறிகள் ஆகியவற்றை பீட்ரூட் சாறு முறியடிக்கும். பீட்ரூட் ஜூஸ் அருந்துவதால் நமது சருமத்திற்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமம் வழக்கத்தைக் காட்டிலும் பிரகாசமாக காட்சியளிக்கும்.

தலைமுடி ஆரோக்கியம் : பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட் சத்து, விட்டமின் சி ஆகியவை நிறைவாக உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே முடி வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியவை மற்றும் முடி உதிர்வை தடுக்கும். இது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் அனைத்து அழற்சிகளுக்கும் இது தீர்வை கொடுக்கும்.

கழிவுகளை வெளியேற்றும் : நம் உடலில் உள்ள கழிவுகளை இயற்கையான சுத்திகரிக்கக் கூடிய உணவுப் பொருட்களில் பீட்ரூட்டிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. நச்சுக்கள் வெளியேறினால் சருமம் தெளிவானதாக காட்சியளிக்கும். இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படும். செரிமானத் திறன் மேம்படும்.

உயர் ரத்த அழுத்தம் குறையும் : உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கக் கூடிய நபர்களுக்கு பீட்ரூட் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தினந்தோறும் காலை பொழுதில் பீட்ரூட் சாறு அரை கிளாஸ் அளவு குடித்து வர ரத்த அழுத்தம் வெகுவிரைவில் கட்டுக்குள் வரும். இது மட்டுமல்லாமல் பீட்ரூட் நமது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

0 Comments:

Post a Comment