நாடு முழுவதும் கோடைகாலம் மெதுமெதுவாக துவங்கி வரும் நிலையில் பல இடங்களில் கடும் வெயில் இப்போதே வாட்ட துவங்கி விட்டது. இந்த கோடையில் பிஸியான வேலைநேரம் மற்றும் நீண்ட வேலை நேரங்களை கொண்டவர்கள் தங்களது உற்பத்தித்திறன் மற்றும் சீரான ஆரோக்கியத்தை பராமரிக்க ஹைட்ரேட்டாக இருப்பது அவசியம்.
பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் மற்றும் எலக்ட்ரோலைட்ஸ்களின் முக்கியத்தும் பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும். உடலையும் மனதையும் சிறந்த முறையில் செயல்பட வைக்க போதுமான திரவங்களை எடுத்து கொள்ள பல வழிகள் உள்ளன. இது குறித்து பல தகவல்களை ஷேர் செய்து இருக்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணரான சௌமியா தியாகராஜன். இவர் கூறுகையில் தண்ணீர் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள் ஆகும், இது உடலின் அனைத்து உறுப்புகள் மற்றும் அமைப்புகள் சரியாக செயல்படுவதை உறுதி செய்கிறது.
நாம் டிஹைட்ரேட்டாகி விட்டால் நம்முடைய புத்திசாலித்தனமான உடல் அதற்கான சில சிக்னல்களை வெளிப்படுத்துகிறது. தோல் சுருக்கம், உலர்ந்த மற்றும் வெடித்த உதடுகள், அதிக பசி அல்லது பொதுவான எரிச்சல் கூட உங்கள் உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும். ஆனால் காலை 9 மணி முதல் வேலையில் பிசியாகி விடுவதால் பெரும்பாலானோர் இதுபோன்ற அறிகுறிகளை புறக்கணிக்கின்றனர். பிரபல டயட்டீஷியனான மனிஷா சோப்ரா பேசுகையில், வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து பகல்நேர சோர்வை குறைப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பணியிடங்களில் இருந்தாலும் நாம் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம் என்கிறார்.
பெரும்பாலானோர் ஆஃபிஸ் டைமில் நாம் அடிக்கடி டீ மற்றும் காஃபி குடிப்பார்கள், ஆனால் இவை நம் உடலை ஹைட்ரேட் செய்து மாறாக டிஹைட்ரேட் செய்கிறது, அதாவது நீரழிப்பை ஏற்படுத்துகிறது. பிஸியான வேலை நேரத்திற்கு நடுவில் உங்களை ஹைட்ரேட்டாக வைத்து கோலவஸ்து எப்படி என்பதற்கான டிப்ஸ்களை பார்க்கலாம்.
பெரிய மற்றும் ஃபேன்ஸியான வாட்டர் பாட்டில்கள்: தண்ணீர் காலியானதும் பாட்டிலில் ரீஃபில் செய்ய செல்ல உங்களுக்கு சோம்பலாக இருந்தால் அல்லது பாட்டில் காலியாக இருக்கும் போது மீண்டும் தண்ணீரை நிரப்ப மறந்து விடுகிறீர்கள் என்றால் இந்த ஹேக் உங்களுக்கானது. தண்ணீரை குடிக்க தூண்டும் வகையிலான அழகான மற்றும் ஃபேன்ஸியான வாட்டர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்துங்கள். மேலும் அவை 2-3 லிட்டர் அளவுள்ள பெரிய பாட்டில்களாக இருக்குமாறு பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.
கோல்ட் சூப்ஸ்: ( Cold Soups) கோடை காலம் வந்துவிட்டதால் அடிக்கும் வெயிலுக்கு நடுவே சூடான சூப்களை குடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். கோடைகாலத்திற்கு ஏற்ற Cold Soups-களுக்கான ரெசிபிக்கள் ஆன்லைனில் ஏராளமாக உள்ளன. பூசணி, சுரைக்காய், வெள்ளரி, கீரை போன்ற இலை கீரைகளை கூட Cold Soups தயாரிக்க பயன்படுத்தலாம். குளிர்ச்சியான காய்கறிகளை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள சிறந்த வழியாகவும் இருக்கும்.
இளநீர்: கோடைகால விற்பனையில் மக்கள் அதிகம் குடிக்கும் ஒன்றாக இருக்கிறது இளநீர். இதில் நம் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்ஸ்கள் உள்ளன. குறிப்பாக பேக் செய்யப்பட்ட இளநீரை தவிர்க்கவும். இளநீர் தரும் அற்புத பலன்களை முழுவதுமாக பெற நேரடியாக இளநீர் கடைக்கு சென்றோ அல்லது இளநீரை வீட்டிற்கு வாங்கி வந்தோ குடிக்கவும்.
நீர்ச்சத்துமிக்க உணவுகள்: வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, சிட்ரஸ் பழங்கள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் தண்ணீரைச் சேர்ப்பதற்கான மற்றொரு சிறந்த வழி, உங்கள் பருப்பு, மோர் மற்றும் லஸ்ஸி-யில் அதிகஅளவு தண்ணீரை சேர்ப்பது.
எலக்ட்ரோலைட் சப்ளிமென்ட்ஸ்: உங்களது வேலை வெயிலில் அதிகம் அலைவதாக இருந்தால் வியர்வையால் நீங்கள் இழக்கும் எலக்ட்ரோலைட்ஸ்களை நிரப்ப நல்ல தரமான எலக்ட்ரோலைட் சப்ளிமென்ட்ஸ் எடுப்பதை உறுதி செய்யவும்.
ஆரோக்கிய ஸ்நாக்ஸ் : வழக்கமாக எடுத்து கொள்ளும் நொறுக்கு தீனிகளுக்கு பதில் கோடை காலத்தில் தர்பூசணிகள், பெர்ரி, வெள்ளரிகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடவும். இந்த கோடையில் ஊழியர்கள் நலன் மீது அக்கறை கொண்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிக தண்ணீர் குடிக்க வலியுறுத்துவதோடு பிற ஆரோக்கிய பானங்களை அவர்களுக்கு வழங்கலாம்.
No comments:
Post a Comment