கடும் குளிர் நீங்கள் படிப்படியாக கோடை காலம் வந்து விட்டது. பொதுவாக கோடைகாலம் அவுட்டோர் ஆக்டிவிட்டீஸ்களுக்கு ஏற்றது என்றாலும் இந்த சீசன் பலரின் தூக்க சுழற்சியில் சில இடையூறுகளை ஏற்படுத்துகிறது.
ஆம், வானிலை மாற்றம், அதிக வெப்பம் மற்றும் வியர்வை தவிர சிலருக்கு தூங்குவது இந்த சீசனில் சவாலாக இருக்கும். இரவு சரியாக தூங்காவிட்டால் அது பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கோடை காரணமாக உங்களுக்கும் இரவு நேர தூக்கம் என்பது சவாலாக இருப்பின், கீழ்காணும் இந்த எளிய ட்ரிக்ஸ்கள் மூலம் நல்ல தூக்கத்தை பெற முயற்சிக்கவும்.
உங்கள் பெட்ரூமை கூலாக வைத்திருங்கள் : உங்கள் பெட்ரூமின் வெப்பநிலையானது உங்கள் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் பெட்ரூமின் வெப்பநிலை 60-67°F இடையே இருக்க வேண்டும். கோடை காலத்தில் உங்கள் பெட்ரூம் அதிக சூடாவதை தவிர்க்க பகலில் உங்கள் பெட்ரூம் ஜன்னல்கள் மற்றும் ஸ்கிரீன்களை மூடி வைக்கவும். அது போல இரவு நேரங்களில் காற்றோட்டமாக இருக்க பகலில் மூடி வைத்திருந்த ஜன்னல்கள், ஸ்கிரீன்களை திறந்து வைக்கவும். உங்கள் ரூமின் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஃபேன் அல்லது ஏர் கண்டிஷனிங்கை பயன்படுத்தலாம்.
தரமான மெத்தை & தலையணை: நீங்கள் பயன்படுத்தும் தரமற்ற பெட் மற்றும் தலையணை கூட உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கலாம். நல்ல தரமான மெத்தை மற்றும் தலையணைகளை பயன்படுத்துங்கள். அதே போல கோடை காலத்தில் நீங்கள் காட்டன் மற்றும் கைத்தறி போன்ற லைட்வெயிட் மற்றும் காற்றோட்டமான துணிகளை படுக்கையில் பயன்படுத்தலாம். இது போன்ற துணி வகைகள் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுவதோடு, இரவு முழுவதும் வசதியாக தூங்குவதை உறுதி செய்கிறது.
இரவு நேர வழக்கங்கள்: தூங்குவதற்கான நேரம் இது என்பதை உங்கள் உடல் மற்றும் மூளைக்கு உணர்த்த புத்தகம் படிப்பது, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, தியானம், பிடித்த இசை கேட்பது அல்லது யோகா போன்ற அமைதியான சில இரவு நேர வழக்கங்களை பின்பற்றுங்கள். தூங்க செல்வதற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பாகவே மொபைல் மற்றும் டிவி-க்கு டாட்டா சொல்லிவிடுங்கள்.
ஹைட்ரேட்டாக இருங்கள்: உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் போவதும் தூக்கத்தை சீர்குலைக்கும். எனவே கோடை காலத்தில் பகல் நேரங்களில் உங்கள் உடலுக்கு போதுமான தண்ணீரை மற்றும் திரவங்களை பருகுவதில் கவனம் செலுத்துங்கள். அதே நேரம் தூங்க செல்வதற்கு முன் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும், இல்லை என்னால் சிறுநீர் கழிக்க அடிக்கடி எந்திரிக்க நேரிட்டு அதனால் தூக்கம் கெடும்.
காஃபின் & ஆல்கஹாலை தவிர்க்கவும்: காஃபின், ஆல்கஹால் ஆகிய இரண்டுமே உங்கள் தூக்க சுழற்சியில் தலையிடுபவை. குறிப்பாக மாலை அல்லது இரவு நேரங்களில் தூங்க செல்லும் முன் காஃபின் பானங்கள் அல்லது ஆல்கஹால் நுகர்வை தவிர்க்கவும். இவற்றுக்கு பதில் தூங்க செல்லும் முன் தூக்கத்தை ஊக்குவிக்கும் ஹெர்பல் டீ அல்லது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
ஓளி மற்றும் சத்தத்தை தவிர்க்க... கோடை காலத்தில் வழக்கத்தை விடமுன்னதாகவே சூரியன் உதிக்கும், தவிர சத்தத்தை உருவாக்கும் வெளிப்புற நடவடிக்கைகள் அதிகமாக இருக்கலாம். ஒளி மற்றும் இரைச்சல்கள் உங்கள் தூக்க சுழற்சியை சீர்குலைக்கலாம். எனவே ஒளியை தடுக்க பிளாக்அவுட் கர்டெயின்ஸ்களை பயன்படுத்தலாம், இரைச்சல் உங்கள் தூக்கத்தை கெடுப்பதை தவிர்க்க இயர்பிளக்ஸ் அல்லது ஒயிட் நாய்ஸ் மெஷின்களை பயன்படுத்தலாம்.
நிலையான தூக்க அட்டவணை: எல்லா நாளும் இரவு ஒரே நேரத்தில் தூங்க செல்வது மற்றும் காலை ஒரே நேரத்தில் கண்விழிப்பது உங்கள் தூக்க சுழற்சியை சீராக்க உதவும். வார இறுதி நாட்களாக இருந்தாலும் கூட உங்களது உறங்கும் நேரம் மற்றும் எழுந்திருக்கும் நேரங்களை சீராக பராமரிப்பது என்பது எப்போது தூங்கி எழுந்திருக்க வேண்டும் என்பதை உங்கள் உடல் மற்றும் மனம் கற்று கொள்ள உதவும்.
No comments:
Post a Comment