ஹெர்னியா என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது, இதன் வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்..! - Agri Info

Adding Green to your Life

March 15, 2023

ஹெர்னியா என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது, இதன் வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்..!

 ஹெர்னியா என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஹெர்னியா நோயானது தமிழில் குடலிறக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. பலவீனமான வயிற்றின் தசைச்சுவர் துவாரம் வழியே குடலின் ஒரு பகுதி அல்லது கொழுப்பு திசு வெளியில் வயிற்று பகுதியில் பிதுங்கி தெரியும் பிரச்சனை ஹெர்னியா என குறிப்பிடப்படுகிறது.

ஹெர்னியாவை பற்றி இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் வலுவிழந்து பலவீனமாக இருக்கும் வயிற்று பகுதியின் அடிப்புறச் சுவர் வழியே சிறுகுடல் பிதுக்கி அல்லது துருத்தி கொண்டு, வெளிப்புறமாகப் பார்க்கும்போது புடைப்பாக இருக்கும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என கூறப்படுகிறது. ஹெர்னியா பிரச்சனையானது பொதுவாக பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஹெர்னியாவானது மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் உருவாகிறது. இது வழக்கமாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது, அல்லது சில நேரங்களில் மிக குறைவான அறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது. ஹெர்னியாவால் தோன்றும் கட்டி அல்லது புடைப்பு நோயாளி படுத்திருக்கும்போது சில நேரங்களில் மீண்டும் உள்ளே தள்ளப்பட்டு மறைந்துவிடும். இருமும் போது ஹெர்னியா வெளிப்படக்கூடும்.

ஹெர்னியாவின் வகைகள்:

Inguinal hernia - இந்த வகையான ஹெர்னியாவானது, கொழுப்பு திசு அல்லது குடலின் ஒரு பகுதி தொடை வழியே ஏற்படுகிறது. குடலிறக்கம் ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்களிலும் ஏற்படலாம். இது மிகவும் பொதுவான வகை குடலிறக்கம் மற்றும் இது முக்கியமாக ஆண்களை பாதிக்கிறது.

What is Hernia | Dr. Abhimanyu Kapoor

Femoral hernia - குடல் திசுக்கள் தொடை சுவற்றை நோக்கி தள்ளப்படுவது பெமோரல் ஹெர்னியா எனப்படுகிறது. அதாவது இடுப்பு அல்லது உள் தொடையின் தசைச் சுவரில் உள்ள ஒரு பலவீனமான இடத்தில் குடல் திசுக்கள் வெளியே தள்ளப்படும்போது ஏற்படுகிறது.

Umbilical hernia - இந்த வகை ஹெர்னியாவானது கொழுப்பு திசு அல்லது குடலின் ஒரு பகுதி தொப்புளின் வழியே பிதுங்கி நீளும் போது ஏற்படுகிறது. தொப்புளில் உள்ள உறுதியான திசு மிகவும் மெல்லியதாகி, இடைவெளியை ஏற்படுத்தும்போது இந்த ஹெர்னியா ஏற்படுகிறது. வயிற்றில் மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அல்லது கர்ப்பம் மற்றும் உடல் பருமன் காரணமாக பெரியவர்களுக்கு இது ஏற்படுகிறது.

பிற வகைகள்:

Incisional hernia - முந்தைய அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட வடு மூலம் கட்டி உருவாகிறது

Epigastric hernia - இந்த வகை ஹெர்னியா என்பது குடலின் ஒரு பகுதி வயிற்று தொப்புளுக்கு மார்புக்கும் இடையில் உள்ள வயிற்று தசைகள் வழியாயே குடலின் ஒருபகுதி வெளியே தள்ளப்படும்போது ஏற்படுகிறது.

Diaphragmatic hernia - இந்த வகை ஹெர்னியா உதரவிதானத்தில் ஒரு துளை இருக்கும் ஒரு பிறப்பு குறைபாடு ஆகும். அடிவயிற்றில் உள்ள உறுப்புகள் (குடல் மற்றும் கல்லீரல் போன்றவை) உதரவிதானத்தில் உள்ள துளை வழியாக மேல்நோக்கி மார்புக்குள் செல்லலாம். வயிற்றில் உதரவிதானம் சரியாக வளரவில்லை என்றால் இது குழந்தைகளை பாதிக்கலாம்.

Muscle hernia - இந்த வகை ஹெர்னியாவில் தசையின் ஒரு பகுதி திசு வழியே புடைத்து நிற்கும். இது விளையாட்டு காயத்தின் விளைவாக பொதுவாக கால் தசைகளில் ஏற்படுகின்றன.

கண்டறிவது எப்படி.?

பாதிக்கப்பட்ட பகுதியை பரிசோதிப்பதன் மூலம் மருத்துவர் எந்த வகை ஹெர்னியா என்பதை கண்டறிவார், தவிர நோயாளி ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்படுகிறார். பாதிப்பின் அளவை உறுதிப்படுத்த நோயறிதலை செய்த பின் ஹெர்னியாவை சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவையா என்பதை அறுவை சிகிச்சை நிபுணர் தீர்மானிப்பார்.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தீர்மானிக்கும்போது ஹெர்னியாவின் வகை மற்றும் ஹெர்னியா ஏற்பட்டுள்ள பகுதிகள் கருத்தில் கொள்ளப்படும் காரணிகளாக இருக்கின்றன. ஏனெனில் சில வகையான ஹெர்னியாக்கள் மற்றவற்றை விட குடல் அடைப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

அறுவை சிகிச்சை எப்போது.?

அறிகுறிகள் கடுமையாக இருந்தாலோ அல்லது மோசமாகினாலோ அல்லது ஹெர்னியா நோயாளியின் இயல்பான செயல்பாட்டு திறனைப் பாதித்தால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படலாம்.

பின்வரும் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவசர சிகிச்சை...

வயிற்றில் திடீர் மற்றும் கடும் வலி மற்றும் ஹெர்னியாவால் மலம் கழிப்பதில் சிரமம், மீண்டும் மீண்டும் வாந்தி, ஹெர்னியா பாதிக்கப்பட்ட பகுதிகளில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவசர சிகிச்சை தேவைப்படுகிறது.

Hernia Operation - Types, Risks, Preparation, Recovery | Sahyadri Hospital

சர்ஜரி:

ஓபன் சர்ஜரி - கட்டி அல்லது புடைப்பை மீண்டும் வயிற்றுக்குள் தள்ள செய்யப்படும் சர்ஜரி

லேப்ராஸ்கோபி - இது மிகவும் கடினமான ஒன்று என்றாலும் திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் செய்யப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment