எலுமிச்சை பழம் கோடை காலத்தில் ஏழை எளிய மக்கள் முதற்கொண்டு அனைத்து தரப்பினரும் விரும்பி பயன்படுத்தும் பழமாக உள்ளது. நிம்பு பானி, ஷிகன்ஜி மற்றும் நிம்பு சோடா என்றும் அழைக்கப்படும் எலுமிச்சை நீர் கோடை காலத்தில் அனைவருக்கு ஏற்றது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் இதனை மக்கள் விரும்பி அருந்தும் பானமாக உள்ளது. கோடை காலம் என்று கிடையாது பொதுவான தினங்களில் கூட பலரும் காபி, டீக்கு பதிலாக இளம் சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். அப்படி பருகுவதால் ஆரோக்கியத்தோடு, சுறுசுறுப்பு மற்றும் புத்துணர்ச்சியும் கிடைத்து நாளை இனிமையாக ஆரம்பிக்க உதவுகிறது.
மேலும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. வெதுவெதுப்பான நீரில் அரை பாதி எலுமிச்சை சாறு பிழிந்து 2-3 முறை தினமும் குடிப்பது ஜீரண மண்டலத்திற்கும், இதயம், கண் போன்ற உறுப்புகளுக்கும் நல்லது என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து, ஃப்ரீ ரேடிக்கல்களை சேதப்படுத்தாமல் செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு பக்கவாதம் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட எலுமிச்சை சாறு கலந்த அல்லது எலுமிச்சை துண்டுகள் கலந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் உடலுக்கு கிடைக்கிறது என பார்க்கலாம்..
1. உடல் எடை குறைப்பு: எலுமிச்சையில் நிறைந்துள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்து கொழுப்புகளின் ஆக்ஸினேற்றத்திற்கு உதவுகிறது. எலுமிச்சை பழத்தில் காணப்படும் பெக்டின் என்ற நார்ச்சத்து பசியைக் குறைக்கவும், வயிற்றை முழுமையாக உணரவும் வைக்கிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவது மற்றும் தேவையற்ற நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்வது குறைக்கப்படுகிறது. காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இது செரிமான செயல்முறையை நன்றாக வைத்திருப்பதோடு, கொழுப்பை எரித்து, எடையை எளிதில் குறைக்கவும் உதவுகிறது.
2. நீரேற்றம்: எலுமிச்சை நீர் உடல் நீரேற்றத்தை மேம்படுத்துகிறது. ஏனெனில் தண்ணீரில் கலக்கும் புளிப்புச் சுவை அதனை அதிக அளவில் உட்கொள்ள வைக்கிறது. எலுமிச்சை நீர் நம் உடலில் சோடியம் அளவை மேம்படுத்த உதவுகிறது மற்றும் உடலுக்கு நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பதோடு, முக்கிய ஊட்டச்சத்துக்களை நிரப்பவும் உதவுகிறது. எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது.
3. செரிமானம்: காலையில் சூடான அல்லது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது சிறந்தது. ஏனெனில் இது சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு, செரிமானப் பாதையை சுத்திகரிக்க உதவுகிறது. உங்கள் நாளை வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் தொடங்க முடிவு செய்தால், நீங்கள் மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் முயற்சி செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஆயுர்வேத அடிப்படையில், எலுமிச்சை நீர் செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவும் 'அக்னி' எனப்படும் நெருப்பு உறுப்பை தூண்டுவதாக நம்பப்படுகிறது.
4. சரும பலன்கள்: எலுமிச்சை நீரில் அதிக வைட்டமின் சி உள்ளது, இது தோல்களில் சுருக்கம் மற்றும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. 2016ம் ஆண்டு எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, முடிகளற்ற எலிகளின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை சிட்ரஸ் சாறு அமிலம் கட்டுப்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment