ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இளமை பருவம் என்பது மிகவும் முக்கியமான அதேசமயம் அதிக கவனத்துடன் கடக்க வேண்டிய ஒரு பருவமாகும். இந்த காலத்தில் தான் உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு வித மாற்றங்கள் உண்டாகக்கூடும். இளமைப் பருவத்தினருக்கு அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோருக்கும் இது ஒரு சவாலான காலகட்டமாகத்தான் இருக்கும்.
மன அழுத்தம் : இன்றைய காலத்தில் இளம் பருவத்தினர் மனநிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பதுதான் மிக முக்கியமான ஒரு சவாலாக இருந்து வருகிறது. பல்வேறு இளம் வயதினரும் மிக எளிதாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுகின்றனர். மேலும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதமும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், கல்வியில் ஏற்படும் மன அழுத்தம், உளவியல் ரீதியான பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன. இவற்றில் இருந்து வெளிவருவதற்கு கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு துணை தேவைப்படுகிறது.
போதை பழக்கம் : இளம் பருவத்தினர் இடையே போதை பொருள் பழக்கமானது மற்றொரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மது அருந்த ஆரம்பித்து விட்டாலே சுய ஒழுக்கம் சீர்குலைவது மட்டுமல்லாமல் அவர்களின் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் உண்டாகும்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற பல்வேறு விதமான ஆபத்தான செயல்களில் அவர்கள் ஈடுபடுவார்கள். இவை உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே முடிந்த அளவு இடம் பெறுவதற்கு மது அருந்துவதன் தீய விளைவுகளை பற்றியும் அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு தேவையான அறிவுரைகளை வழங்கியும் அவர்களின் வாழ்க்கையை சீர்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும்.
பாலுறவு பற்றிய சரியான ஒரு புரிதலை இளம் வயதிலேயே அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். எவ்வாறு பாதுகாப்பாக உடலுறவு கொள்வது என்பதை பற்றியும் எச்ஐவி போன்ற நோய் தொற்றுக்களை பற்றியும் இளம் வயதிலேயே அவர்களுக்கு புரிய வைப்பதின் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து அவர்களை காப்பாற்ற முடியும்.
உடற்பயிற்சி : தினசரி உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை பற்றி அவர்களுக்கு புரியவைப்பது முக்கியமானது. ஏதேனும் ஒரு விளையாட்டுப் போட்டிகளில் அவர்களை ஈடுபட வைக்க வேண்டும். சரியான உணவுப் பழக்கத்தை பற்றியும் எவ்வாறு நம்மை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பதை பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். உடற்பயிச்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி எடுத்துரைக்க வேண்டும்.
உணர்சிவசப்படுதல் : இன்றைய இளைஞர்கள் அதிக அளவில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கிறார்கள். எவ்வாறு உணர்வுகளை சரிவர வெளிப்படுத்துவது என்பதை பற்றிய புரிதல் அவர்களுக்கு இருக்க வேண்டும். மேலும் அவர்கள் மனதளவில் சோர்வாக இருக்கும் சமயத்தில், அவர்களின் சவாலான காலகட்டங்களை கடப்பதற்கு பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் அவர்களுக்கு உதவி செய்வது அவசியமாகும்.
மேலே கூறிய இந்த மன ஆரோக்கியம் போதை பொருள் பழக்கத்தை பற்றி விழிப்புணர்வு உடல் இயக்கம் மற்றும் சுகாதாரங்கள் பற்றிய கல்வி பாலுறவு பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றை பற்றி நிலம் பருவத்தினர் சரியாக புரிந்து கொண்டாலே அவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் அறிவாற்றலுடனும் வளருவார்கள்.
0 Comments:
Post a Comment