டீயுடன் சேர்த்து ரஸ்க் சாப்பிடுகிறீர்களா..? இந்த பக்கவிளைவுகளை தெரிஞ்சுக்கோங்க..! - Agri Info

Adding Green to your Life

March 2, 2023

டீயுடன் சேர்த்து ரஸ்க் சாப்பிடுகிறீர்களா..? இந்த பக்கவிளைவுகளை தெரிஞ்சுக்கோங்க..!

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் ரஸ்க்கை விரும்பி சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான மக்கள் டீ அல்லது காபியோடு ரஸ்க்கை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அப்படியல்ல. நீங்கள் ரொம்ப காலமாக பின்பற்றி வரும் இந்த பழமையான கலவையானது உங்கள் ஆரோக்கியத்தை அமைதியாக அழிக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

மேலும் ரஸ்க் மிகவும் மலிவானது மற்றும் சாப்பிட எளிதானது. அதனால் வேலைக்கு செல்லும் போது காலையில் டீயுடன் ரஸ்க் சாப்பிட அனைவரும்  விரும்புகிறார்கள். இது வயிற்றையும் நன்றாக நிரப்பும். இது ரொட்டியை விட ஜீரணிக்க எளிதானது என்று கருதப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. ரஸ்க் பொதுவாக மாவு, சர்க்கரை, ஈஸ்ட் மற்றும் நெய் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால்  சுகர் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதும் மற்றவர்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்வதும் ஆப்பத்தானது.

ஒரு ஆய்வு அறிக்கையின்படி, ரஸ்க் பெரும்பாலும் பழைய ரொட்டியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது உங்கள் உடல்நலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ரஸ்க் பிஸ்கட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று ஈஸ்ட், சர்க்கரை, எண்ணெய் மற்றும் மாவு, ஆனால் பெரும்பாலான கடைகளில் வாங்கும் ரஸ்க் பழமையான ரொட்டிகள் ரஸ்க் பிஸ்கட்களை உருவாக்குவதற்கு மாற்றியமைக்கப்படுகின்றன. காலாவதியான ரொட்டிகளில் நோய்க்கிருமிகள் இருக்கலாம், அவை வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் உணவு நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

இதயத்திற்கு கேடு: ரஸ்க் மாவு, எண்ணெய் மற்றும் சர்க்கரையை அதிகமாக சேர்த்து செய்தால், அது இதய நரம்புகளை பலவீனப்படுத்துகிறது. இது மாரடைப்பு போன்ற இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

செரிமான அமைப்பு பிரச்சனைகள்: ரஸ்க்குகள் செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. ரஸ்க் சாப்பிட எளிதாக இருந்தாலும் ஜீரணிக்க கடினமாக இருக்கும். இது வயிறு சம்பந்தமான பல நோய்களை உண்டாக்கும்.

சத்துக்கள் குறைவு: ரஸ்க் சாப்பிடுவதால் சத்துக்கள் குறைவு. இதை சாப்பிட்டால் வயிறு நிரம்புகிறது. ஆனால் எந்த ஆரோக்கிய நன்மைகளும் இல்லை. வயிற்றை பசியின்றி மந்தநிலைக்கு தள்ளுகிறது.

உயர் இரத்த சர்க்கரை: ரஸ்க் அதிகமாக சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு காரணமாக, நீரிழிவு நோய் தவிர, இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகளின் அபாயமும் அதிகரிக்கிறது.


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment