Search

உலர்ந்த பழங்கள்... பிரஷ் பழங்கள்...

 பழங்கள், உலர் பழங்கள் இவற்றில் எதை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. பழங்களை எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் அவை உடலுக்கு ஆரோக்கியம்தான்.

 'பிரஷ்ஷாக' கிடைக்கும் பழங்களில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதோடு அவை ஊட்டச்சத்துக்களாலும் நிரப்பப்பட்டிருக்கும். இருப்பினும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எவற்றில் அதிகமாக இருக்கிறதோ அதை சாப்பிடுவது சிறந்தது. 

உலர்ந்த பழங்கள், பிரஷ் பழங்கள் இவற்றில் எது சிறந்தது என்பது குறித்து பார்ப்போம்.

 வைட்டமின்கள்: பிரஷ் பழங்களில் ஏ, பி மற்றும் சி நிறைந்திருப்பதோடு அவை உடலில் நீரிழப்பை தடுக்கும் தன்மை கொண்டவை. உலர்ந்த பழங்களில் நீர்ச்சத்து இருக்காது. சில நேரங்களில் வெப்ப உணர்திறன் காரணமாக அவற்றில் இருந்து வைட்டமின்களும் அகற்றப்பட்டிருக்கும். ஆதலால் வைட்டமின்களை உள்ளடக்கி இருப்பதில் உலர் பழங்களை விட பிரஷ் பழங்கள் சிறந்தவை.

சர்க்கரை: பிரஷ் பழங்களுடன் ஒப்பிடும்போது உலர் பழங்களில் அதிக சர்க்கரை உள்ளடங்கி இருக்கும். பெரும்பாலும் உலர்ந்த பழங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதனால் உடலில் சர்க்கரை அளவை குறைக்க விரும்புபவர்கள் உலர் பழங்கள் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. 

ஊட்டச்சத்து அடர்த்தி: உலர் பழங் களை விட பிரஷ் பழங்களில் ஊட்டச்சத்து மதிப்பு அதிகமாக இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களும் அப்படியே இருப்பதால் பிரஷ் பழங்கள் சதைப்பற்றுடன் காணப்படும். உலர்ந்த பழங்களை பொறுத்தவரை, நீர்ச்சத்து பிரித்தெடுக்கப்பட்டு வெப்பநிலையில் உலரவைக்கப்படுகின்றன. அதனால் சில சமயங்களில் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறையக்கூடும்.

உலர் பழங்களுடன் ஒப்பிடும்போது பிரஷ் பழங்களே சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை. அதற்காக உலர்ந்த பழங்கள் மோசமானவை அல்ல. நீர்ச்சத்து இல்லாவிட்டாலும் ஆயுளை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை. எனினும் அன்றாடம் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை நிவர்த்தி செய்வதில் பிரஷ் பழங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

தினமும் உலர் பழங்கள் சாப்பிட்டாலும் கட்டாயம் பிரஷ் பழங்களையும் சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். சில இடங்களில் பழ சாகுபடி குறைவாக இருக்கும். 

குறிப்பிட்ட சீசனில் மட்டும்தான் பழங்கள் விளையும். அதனால் அங்குள்ள மக்களால் பிரஷ்ஷாக பழங்களை சாப்பிட முடியாது. அப்படிப்பட்ட சமயங்களில் உலர் பழங்களை சாப்பிடலாம். பழங்களை எந்த வடிவில் உட்கொண்டாலும் அவை உடலுக்கு நன்மை அளிக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


0 Comments:

Post a Comment