தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது "அனைவருக்கும் இசேவை வழங்கும் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசு இசேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் அனைத்தும் இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, இத்திட்டம் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இசேவை மையங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இசேவை மையங்கள் அமைக்க உதவுகிறது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும் பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீட்டின் அருகாமையிலையே விரைவான மற்றும் சிறந்த சேவைய வழங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.
இத்திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க கணினி (Computer) அச்சுப்பொறி (Printer), ஸ்கேனர் (Scanner), கைரேகை அங்கீகார சாதனம் (Biometric device), இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும். மற்றும் குடிநீர் வசதி பார்வையாளர் அமரும் நாற்காலி, சாய்வுதளம் (Ramp) போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். மேலும் மையத்தை நடத்தும் ஆப்ரேட்டர் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தின் தகுதி நிபந்தனைகளை அனைத்தும் அறிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணையதளத்தை பார்க்கவும்.
இந்த திட்டத்திற்கான வலைத்தளம் கடந்த 15.03.2023 முதல் திறக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்போது, www.tnesevai.tn.gov.in (அல்லது) www.tnega.tn.gov.in என்ற இணையதனம் வாயிலாக எதிர்வரும் ஏப்ரல் 14ம் தேதி 08:00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். வேறு ஏதேனும் தகவல்களுக்கு, 8925297888, 8925407888, 8925137888, 8925327888 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment