பச்சை, கருப்பு அல்லது சிவப்பு திராட்சை... இந்த மூன்றில் எது ஆரோக்கியம் நிறைந்தது..? - Agri Info

Adding Green to your Life

March 15, 2023

பச்சை, கருப்பு அல்லது சிவப்பு திராட்சை... இந்த மூன்றில் எது ஆரோக்கியம் நிறைந்தது..?

 



அன்றாடம் சாப்பிடும் பழ வகைகளில் திராட்சையும் கட்டாயம் இடம் பெறும். இதில் நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படும் ஆற்றல் என பல நன்மைகளை கொண்டுள்ளதால் அன்றாடம் ஒரு கப் சாப்பிடுவது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆய்வுகளிலும் ஒரு நாளைக்கு 3 கப் திராட்சையை ஸ்நாக்ஸ் போல் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த முடியும் என்கிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்... திராட்சை வாங்கலாம் என கடைக்கு சென்றால் அங்கு மூன்று வித திராட்சையும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் விலை மலிவானது எது என்பதை விட எது ஆரோக்கியமானது என்பதே முக்கியம். அந்தவகையில் நீங்களும் கடைக்கு திராட்சை வாங்கும்போது குழம்புகிறீர்கள் எனில் உங்களுக்காகவே இந்த கட்டுரை.

பச்சை திராட்சை : பச்சை திராட்சை அதிகமாக கிடைக்கக் கூடியது மற்றும் மலிவு விலையில் கிடைக்கும். இது அதிக சுவை கொண்டது என்பதால் குழந்தைகள் கூட விரும்பொ சாப்பிடுவார்கள். ஆய்வுகளின் படி பச்சை திராட்சையில் 104 கலோரிகள் உள்ளன. 1.4 கிராம் புரோட்டீன், 0.2 கிராம் கொழுப்பு மற்றும் 27.3 கிராம் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இந்த பச்சை திராட்சை விட்டமின் சி , விட்டமின் கே மற்றும் பொட்டாசியம் நிறைந்தது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சிறந்தது. விட்டமின் கே இருப்பதால் இரத்தம் உறைதல் பிரச்சனை, எலும்பு பிரச்சனைகளுக்கு பலனளிக்கிறது. பொட்டசியம் இருப்பதால் இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கருப்பு திராட்சை : கருப்பு அல்லது ஊதா நிறம் கொண்ட இந்த திராட்சை ஜூஸ் வகைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும். குறிப்பாக ஒயின் தயாரிக்க இந்த திராட்சைதான் பயன்படுத்தப்படுகிறது. இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்தது என்பதால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஒரு கப் கருப்பு திராட்சையில் 104 கலோரி, 1.1 கிராம் புரோட்டீன் , 02 கிராம் கொழுப்பு மற்றும் 27.3 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. இதுவும் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே -வுக்கு சிறந்த மூலமாக உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சில வகையான புற்றுநோய்களுக்கும் பலனளிக்கிறது.

சிவப்பு திராட்சை : இது இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவை கொண்டது. இது ஃபுரூட் சாலட், ஜாம் , ஜெல்லி தயாரிப்புகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ரெட் ஒயின் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கப் சிவப்பு திராட்சையில் 104 கலோரி, 1.1 கிராம் புரோட்டீன் , 02 கிராம் கொழுப்பு மற்றும் 27.3 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. பச்சை மற்றும் கருப்பு திராட்சையை போல் இதிலும் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே உள்ளன .

கருப்பு, சிவப்பு, பச்சை... எந்த திராட்சை சிறந்தது..? 

இந்த மூன்று நிற திராட்சையிலும் நன்மைகள் என்பது ஒரே பண்புகளை கொண்டுள்ளன. கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளில் மட்டும் ரெஸ்வெராட்ரோல் (resveratrol) என்னும் பண்பு உள்ளது. இது எலும்பு ஆரோக்கியம் , இதய ஆரோக்கியம் மற்றும் சில வகையான புற்றுநோய் செல்களை தடுக்க உதவுகிறது. எதுவாயினும் மூன்றுமே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதால் மூன்றையும் கூட சாப்பிடலாம் அல்லது உங்களுக்கு இதில் பிடித்த சுவை எதுவோ அதையே சாப்பிடலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


No comments:

Post a Comment