கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து வாய், மூக்கு வழியாக ஒரே நேரத்தில் சுவாசிக்கும் ஒரு நிகழ்வு. நம்மில் பலர் அடிக்கடி கொட்டாவி விடுவோம். அது இயல்பானது என நினைத்து கொண்டிருந்தோம். ஆனால், அடிக்கடி கொட்டாவி வருவது ஒரு சில நோயின் அறிகுறி என்று மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது. என்ன நம்ப முடியவில்லையா?. உடல் சோர்வால் பெரும்பாலும் வரும் இந்த கொட்டாவியின் பின் உள்ள மற்ற காரணங்கள் குறித்து இங்கு காணலாம்.
கல்லீரல் பிரச்சனை : கல்லீரல் அழற்சி மற்றும் பாதிப்பு போன்ற காரணங்களால் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, நீண்ட நாட்களாக அடிக்கடி கொட்டாவி வந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நல்லது.
மல்டிபிள் கெலொரிசிஸ் : உடல் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாட்டினை நாம் மல்டிபிள் கொலோரிசிஸ் (Multiple sclerosis) என அழைக்கிறோம். இந்த பிரச்சனை உள்ள போது, அடிக்கடி கொட்டாவி வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூளை தொற்று : மூளை பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் அழற்சி, மூளையின் செயல்பாட்டை பாதிப்பதோடு, கொட்டாவி பிரச்சனையையும் உண்டாக்குகிறது. எனவே, அடிக்கடி கொட்டாவி வரும் நிலையில் மருத்துவரை சந்திப்பது நல்லது.
வலிப்பு பிரச்சனை : வலிப்பு எனப்படுவது ஒரு வகையில் மூளை ஆரோக்கியத்துடன் தொடர்புடைய ஒரு நோய் ஒரு பிரச்சனையாகும். அந்த வகையில் கை, கால் வலிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த கொட்டாவி பிரச்சனை சற்று அதிகமாகவே உள்ளது.
மருந்து உட்கொள்ளுதல் : அளவுக்கு அதிகமாக நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், குறிப்பாக தூக்கத்திற்கு நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் நரம்பு மற்றும் தசைகளின் தளர்வுக்கு வழிவகுத்து, கொட்டாவியை தூண்டுகிறது.
உடல் சோர்வு : அனைவரும் அறிந்த கொட்டாவியின் பொதுவான காரணம் ஆகும். உடல் சோர்வு மற்றும் களைப்பின் போது உடலில் ஏற்படும் ஆற்றல் இழப்பு, அதிக கொட்டாவிக்கு வழிவகுக்கிறது.
தூக்கமின்மை : வேலைபளு அல்லது வேறு சில காரணங்களால் நீங்கள் உங்கள் தூக்கத்தை தள்ளிப்போடுவது உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் தாக்கமின்மை கொட்டாவி வருவதற்கு காரணமாகிறது.
ஆம்! கொட்டாவி பற்றிய சிந்தனைகளும் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வர காரணமாக இருக்கலாம். அதேபோல, உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் அடிக்கடி கொட்டாவி விட்டால், உங்களுக்கும் அடிக்கடி கொட்டாவி வரும். ஏன், இந்த செய்தியை படித்த ஒரு சில நிமிடங்களுக்குள் நீங்கள் பல முறை கொட்டாவி விட்டிருக்கலாம்.
No comments:
Post a Comment