பெண்கள் வேலைவாய்ப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி - Agri Info

Adding Green to your Life

March 6, 2023

பெண்கள் வேலைவாய்ப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி

 திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.

இந்த பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் தற்காலிக பணியிடங்களாகும். எனவே, ஆர்வமுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் மார்ச் 7 மாலை 5.00 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிடங்கள்: அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் 1 இடமும், சேரன்மகாதேவி வட்டாரத்தில் 3 இடங்களும், களக்காடு வட்டாரத்தில் 2 இடங்களும், மானூர் வட்டாரத்தில் 4 இடங்களும், பாளையங்கோட்டை வட்டாரத்தில் 3 இடங்களும், பாப்பாக்குடி வட்டாரத்தில் 2 இடங்களும், இராதாபுரம் வட்டாரத்தில் 1 இடமும், வள்ளியூர் வட்டாரத்தில் 4 இடங்களும் என மொத்தம் 20 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான அடிப்படையான தகுதிகள்:  ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office-ல் குறைந்தது 3 மாத வகுப்பு முடித்து (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும் (அல்லது) Computer Science அல்லது Computer Application -ல் பட்டப் படிப்பு பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்;

01.01.2023-ல் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்;

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தை போன்ற திட்டங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்;

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரார் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய எல்லை பகுதிக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். (Residence in same block).

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை https://tirunelveli.nic.inஎன்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். வேறு எவ்வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் (திருநங்கைகள் உட்பட).

விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி, பணி அனுபவ சான்று, கல்விச் சான்று ஆகியவைகளின் நகல் கண்டிப்பாக பதிவேற்றப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபரங்கள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

தகுதியில்லாத மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. மார்ச் 7 மாலை 5.00 மணி வரை மட்டும் விண்ணப்பபங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment