ஒவ்வொரு வகை ஊட்டமின்களும் உடலுக்கு ஒவ்வொரு விஷயத்திற்கு தேவையானது. உடலில் ஏற்படும் விட்டமின் குறைபாடு நமது ஆரோக்கியத்தை பாதிக்கும். அதே போல விட்டமின்கள் அதிகரித்தாலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அந்தவகையில், இன்று வைட்டமின் கே அதிகம் இருக்கும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
திராட்சை பழம் : 1/2 கப் திராட்சை பழத்தில் 6.7 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. திராட்சை பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பாலிபினால்கள் காணப்படுகிறது.
ஆலிவ் ஆயில் : 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலில் 8.1 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இது தினசரி விட்டமின் கே அளவில் 9% தேவையை பூர்த்தி செய்கிறது. ஆலிவ் ஆயிலில் நிறைய விட்டமின் ஈ சத்தும் காணப்படுகிறது.
ப்ளூ பெர்ரி : ப்ளூ பெர்ரியில் 13.1 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. ப்ளூ பெர்ரியில் நார்ச்சத்துக்கள், விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற சத்துக்களும் ஏராளமாக காணப்படுகிறது.
கேரட் : கேரட்டில் விட்டமின் கே யும் காணப்படுகிறது. எனவே விட்டமின் கே சத்தை பெற கேரட்டை நீங்கள் சாலட் இவற்றில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். கேரட் உங்கள் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
முந்திரி : முந்திரியில் 9.7 மைக்ரோ கிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. தினசரி விட்டமின் கே அளவில் 10% தேவையை முந்திரி பூர்த்தி செய்கிறது. முந்திரியில் உடலுக்கு தேவையான இதர சத்துக்களும் காணப்படுகிறது.
முட்டை கோஸ் : முட்டைக்கோஸில் 13.7 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. எனவே விட்டமின் கே பற்றாக்குறையை போக்க இந்த முட்டை கோஸை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்து வரலாம்.
நட்ஸ் : நட்ஸ் வகைகளில் 15.3 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இந்த பைன் நட்ஸை சாலட், சூப் மற்றும் இதர உணவுகளில் சேர்த்து வரலாம். இதில் தாதுக்கள், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் காணப்படுகிறது.
பூசணிக்காய் : பூசணிக்காயில் 19.6 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இந்த பூசணிக்காய் பழத்தை ஸ்மூத்திகள், சூப்கள் மற்றும் சாஸ்களில் பயன்படுத்தி வரலாம். இதன் மூலம் நல்ல விட்டமின் கே ஆதாரத்தை நாம் பெறலாம்.
மாதுளை ஜூஸ் : மாதுளை பழ ஜூஸில் 19.4 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இது தினசரி தேவையில் 21.5% தேவையை பூர்த்தி செய்கிறது. மாதுளை பழம் ஜூஸில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகிறது.
No comments:
Post a Comment