Search

TN Budget 2023: தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்ற வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன?

 

தமிழ்நாட்டில் மூன்றாவது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும் என்று  தமிழ்நாடு நிதி அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, இன்று 2023-24 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். மாநிலத்தில் மனிதவளத்தை  மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பல்தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கு  ரூ. 2,783 கோடி ஒதுக்கீடு:

மாறிவரும் தொழில் சூழலுக்கு தேவைப்படும் மனிதவளத்தை உருவாக்குவதற்கு, 2,877 கோடி செலவில், 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது என்றும், வரும் கல்வி ஆண்டிலேயே, இப்பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதன் அடுத்த கட்டமாக  தொழில்துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0 தரத்திற்கு ஏற்ப அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.  இக்கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்சார் பாடத்திட்டங்களை உருவாக்குவது, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை இத்திட்டத்தின் குறிக்கோள்களாகும். இத்திட்டத்தில் 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிக மையங்களாக தரம் உயர்த்தப்படும் என்றும்  தெரிவித்தார்.

அம்பத்தூரில் TN - WISH அமைக்கப்படும்:  

பல்தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன்,ரூ. 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் 'தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம்’ (TN-WISH) அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள்: 

திறன் பயிற்சி கட்டமைப்பைப் பெருமளவில் அதிகரிக்க, தற்போதுள்ள தொழிற்சாலைகள் தொழிற்பயிற்சிக் கூடங்களாகப் இளைஞர்களுக்கு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். தொழிற்சாலைகளிலேயே பயிற்சி தொழில் அனித்திட நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் (Factory Skill Schools) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில், 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டின் மூன்றாவது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment