தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தலைமைச் செயலக திட்ட மேலான்மை இயக்க அலகின் கீழ் பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பதவி | காலியிடங்கள் எண்ணிக்கை | தொகுப்ப்பூதியம் | அடிப்படைத் தகுதிகள் |
மூத்த ஆலோசகர்(senior consultant) | 1 | 1,25,000 | பொது நிர்வாகம்/சமூக அறிவியில்/ வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான பணிகளில் 5 ஆண்டுகள் முன்பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். |
ஆலோசகர்(Consultant) | 2 | 75,000 | பொது நிர்வாகம்/ சமூக அறிவியல்/ வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான பணிகளில் 3 ஆண்டுகள் முன்பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். |
திட்ட மேலாண்மை உதவியாளர்(Project Management Assistant) | 2 | 30,000 | பொது நிர்வாகம்/ சமூக அறிவியல்/ வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான பணிகளில் 2 ஆண்டுகள் முன்பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் |
கணினி இயக்குபவர் (Data entry operator) | 15,000 | ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றி இருக்க வேண்டும் |
இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு அரசின்அதிகாரப்பூர்வ https://www.tn.gov.in/ta/announcements/announce_view/121012 இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பபங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.04.2023 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி; The Director, Directorate of Social Welfare, 2nd Floor, Panagal Maligai, Saidapet, Chennai-15 ஆகும்.
மேலும், கல்வித் தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை, பணியின் இதர நிபந்தனைகள் தொடர்பான அனைத்து விவரங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக்க கொடுக்கப்பட்டுள்ளன. அதனை, பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment