Search

நாள் ஒன்றுக்கு ரூ.1000 சம்பளம்... தமிழக அரசின் குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு

 தமிழக அரசின் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் இல்லத்தில் உளவியல் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநருக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அதை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-காஞ்சிபுரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துனர்கள் மூலம் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஆற்றுப்படுத்துநருக்கான 2 பணியிடங்கள் மதிப்பூதியம் (Honorarium) அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் இப்பதவிக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற நபர்கள், 25 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பங்களை உரிய அனைத்து சான்றிதழ்களுடன் (ஒளி நகல்கள்) 20-04-2023 மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைத்திட தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்களை கொண்ட தேர்வுக் குழு மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு மதிப்பூதியம் மாதத்தில் ஐந்து தினங்களுக்கு (நாளொன்றுக்கு ரூ.1000/- ஆயிரம் மட்டும்) வழங்கப்படும் இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.317, கே.டி.எஸ். மணி தெரு, மாமல்லன் நகர், (மாமல்லன் மேல்நிலைப் பள்ளி அருகில்), காஞ்சிபுரம் – 631 502. தொலைபேசி எண் 044-27234950

இவ்வாறுமாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment