Search

சென்னை குடிநீர் வாரிய வேலை… எழுத்துத் தேர்வு இல்லை… 108 பணியிடங்கள்… உடனே விண்ணப்பிங்க!

 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 108 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 76

Civil Engineering / Mechanical Engineering – 52

Electrical and Electronics Engineering – 24

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: 9,000

Technician (Diploma) Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை: 32

Civil Engineering – 10

Electrical and Electronics Engineering – 22

கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: 8,000

வயது தகுதி: 31.10.2022 அன்று 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி SC/ ST/ OBC (NCL)/ PwBD பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பயிற்சி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளப் பக்கத்தில் தேடு தளத்தில் CHENNAI METROPOLITAN WATER SUPPLY AND SEWERAGE BOARD என்பதை தேடி, கிளிக் செய்து அதன் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2023/03/CMW_Notification_2023_24.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


0 Comments:

Post a Comment