இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வரும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) கான்ஸ்டபிள் (General Duty) பதவிக்கான ஆட்சேர்ப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கை விதிமுறையின் கீழ் 2023ல், 1.30 லட்சம் கான்ஸ்டபிள் பதவிகள் நிரப்பப்பட இருக்கின்றன. இதில் 10% இடங்கள் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10, +2 அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18- 23க்குள் கீழ் இருக்க வேண்டும் என்றும், பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வில் பங்கேற்பவர்களின் வயது வரம்பை தீர்மானிக்கும் தேதியை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும் என்றும், அக்னிபத் திட்டம் மூலம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த முதல் குழுவினருக்கு (First Batch of Ex- Agniveers) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் 5 ஆண்டு வரை வயது சலுகை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கான்ஸ்டபிள் பதவிக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ. 69,100 வரை சம்பளம் கணக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு, உடற் திறன் தேர்வு (Physical Efficiency Test) மூலம் நியமன முறை இருக்கும் என்றும், முன்னாள் அக்னி வீரர்களுக்கு உடற் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ((ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்பில், காலியிடங்களின் முழு விவரம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தெளிவாகக் கொடுக்கப்படும்.
இது, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆள் சேர்க்கையாக கருதப்படுகிறது. எனவே, காவலர் வேலையை கனவாக கொண்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனவே, அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள மத்திய ரிசர்வ் காவல் படை இணையதளத்தை தொடர்ந்து பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment