Govt Jobs: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள 2,674 சமூக நல அலுவலர், 185 சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைகிறது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல், போதிய கால இடைவெளி இருக்கும் போதே கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்: 2674 சமூக நல அலுவலர் பதவி (Social Security Assistant), 185 சுருக்கெழுத்தர் பணி (stenographer-Group C)
கல்வித் தகுதி: சமூக நல அலுவலர் பதவிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்; அதேபோன்று, சுருக்கெழுத்தர் பதவிக்கு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 2023, ஏப்ரல் 26 அன்று, விண்ணப்பதாரர் வயது வரம்பு 18- 27க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
தேர்வு முறை: சமூக நல அலுவலர் பதவிக்கு எழுத்துத் தேர்வு (Written test), கணினி திறனறிவு தேர்வில் ( Computer Skill test ) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். சுருக்கெழுத்தர் பதவிக்கு எழுத்துத் தேர்வு (Written test), சுருக்கெழுத்தர் திறன் தேர்வில் ( Stenography Skill test ) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.04.2023 ஆகும்.
Apply Online - Social Security Assistant
Apply Online - Stenographer (Group C)
விண்ணப்பம் செய்வது எப்படி? recruitment.nta.nic.in என்ற இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
Click here for latest employment news
No comments:
Post a Comment