திருவள்ளூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பதவி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு Outsourcing முறையில் அதிகபட்சம் 6 மாத காலத்திற்கு பணியில் ஈடுபடுத்த உள்ளது.
அமைப்பியல் துறையில் (Cryil Engineering) பட்டப்படிப்பு (RE) மற்றும் பட்டயப்படிப்பு (DIPLOMA) முடித்து குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 05.04.2023 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கீழ்கண்ட சான்றுகளுடன் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை சேர்த்து அதிகபட்சம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
நேர்காணலுக்கு கொண்டு வரவேண்டிய சான்றுகள்
கல்விச் சான்று (SSLC/HSC/D.C.E/B.E / B.Tech (CIVIL))
பள்ளி மாற்றுச் சான்று
இருப்பிடச்சான்று (குடும்ப அட்டை/ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை)
பணிமுன் அனுபவச்சான்று (3 ஆண்டுகள்)
கணினி கல்வித்தகுதி
ஓட்டுநர் உரிமம்
நேர்காணல் நடைபெறும் இடம்: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், திருவள்ளூர்,
தொலைபேசி 044 27663808
Click here for latest employment news
No comments:
Post a Comment