நேர்காணல் மட்டுமே: ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000 சம்பளத்தில் வேலை - Agri Info

Adding Green to your Life

April 12, 2023

நேர்காணல் மட்டுமே: ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000 சம்பளத்தில் வேலை

 

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள 3 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி: கால்நடை மருத்துவ ஆலோசகர் (Engagement of veterinarians)

காலியிடங்கள் எண்ணிக்கை: 3

கல்வியறிவு: கால்நடை மருத்துவ படிப்பு B.V.SC & A.H, கணினி அறிவு இருக்க வேண்டும். கண்டிப்பாக இருசக்கர ஓட்டுனர் உரிமம் கொண்டிருக்க வேண்டும். இருசக்கர (அல்லது) நான்கு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதி  படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நேரடி தேர்வு நடைபெறும் இடம்:

The General Manager,

Dindigul District Co-operative Milk Producers Union Ltd.,

No.8, East Govinthapuram,

Dindigul – 624 001.

தொலைபேசி எண்கள்: 0451 – 2431516 Fax : 2430480.

மின்னஞ்சல் முகவரி– aavindigl@gmail.com

இணையதளம் – www.aavindindigul.com

இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி ஒப்பந்த காலம் ஓராண்டாகும். 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment