நாம் அன்றாடம் கடைப்பிடிக்கும் ஒரு சில காலை நேர பழக்க வழக்கங்களை சரி செய்தாலே நமக்கு வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதற்கு சான்றாக சில வெற்றி பெற்ற மனிதர்கள் விளங்குகின்றனர்.
வெற்றி என்பது நாம் அனைவரும் அனுபவிக்க ஆசைப்படும் ஒன்றாகும். சிறு விஷயங்களில் இருந்து பெரும் நிகழ்வுகள் வரை அனைத்திலும் நாம் அனைவரும் வெற்றி பெறவே விரும்புவோம். ஆனால், வெற்றி அவ்வளவு எளிதாக ஒருவருக்கு கிடைப்பதில்லை. வெற்றி ஒருவருக்கு எட்டாக் கனி ஒன்றும் இல்லை. வெற்றியின் இரகசியத்தில் ஒன்று கடின உழைப்பு என்றாலும், நாம் அன்றாடம் கடைப்பிடிக்கும் ஒரு சில காலை நேர பழக்க வழக்கங்களை சரி செய்தாலே நமக்கு வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதற்கு சான்றாக சில வெற்றி பெற்ற மனிதர்கள் விளங்குகின்றனர்.
வெற்றி பெற்ற மனிதர்கள் தங்கள் நாளை சரியாகத் தொடங்க தங்கள் அன்றாட காலை நேர வழக்கங்களை நன்கு திட்டமிட்டே செய்வார்கள். அதற்கென அவர்கள் ஒரு சில பழக்க வழக்கங்களை வகுத்து வைத்திருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை அனுபவம், நாம் நம் நாளை சரியாக திட்டமிட கண்டிப்பாக உதவியாக இருக்கும். குறிப்பாக அவர்களைப் போன்று நம் காலை நேர பழக்க வழக்கங்களை வெற்றியை நோக்கிய பாதைக்கு வழிவகுக்கும் விதத்தில் வகுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெற்ற மனிதர்கள் தினமும் காலை நேரத்தில் வழக்கமாக செய்யக் கூடிய சில வெற்றிக்கான வித்திடும் செயல்கள்.
இயற்கை கடிகாரம் : பொதுவாக நாம் அனைவரும் காலையில் எழுந்திருக்க அலாரம் வைப்பது வழக்கம். அலாரம் அடித்தாலும், அதனை ஆஃப் செய்துவிட்டு தூங்கி விடவும் கூடும். ஆனால், வெற்றி பெற்றவர்கள் காலையில் சரியான நேரத்தில் தாங்களாகவே எழுந்திருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டு இருப்பார்கள். அது மட்டும் அல்ல, அவர்கள் தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்வார்கள்.
காலையில் காபி குடிப்பதை தவிர்த்தல் : வெற்றி பெற்றவர்கள் காலையில் காபி குடிப்பதை தவிர்த்துவிட்டு முதலில் தண்ணீர் தான் குடிப்பார்கள்.
உடற்பயிற்சி : பெரும்பாலான வெற்றி பெற்ற மனிதர்கள் தினமும் காலை உடற் பயிற்சிக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி விடுவார்கள். உடற் பயிற்சிக்கு தங்கள் அன்றாட காலை நேர வழக்கத்தில் முன்னுரிமை கொடுப்பார்கள்.
வாசித்தல் : அதே போல் அவர்கள் தினமும் காலையில் வாசிப்பதற்கென நேரம் ஒதுக்கி நாளிதழ் போன்றவற்றை தினமும் வாசிப்பது வழக்கம்.
முடிவெடுத்தல் : அவர்கள் பெரும்பாலும் காலையில் முடிவெடுப்பதை தவிர்த்து விடுவார்கள். ஏனென்றால், காலையில் தொடர்ச்சியாக முடிவு எடுப்பது ஒருவரின் புத்துணர்ச்சியை குறைத்து விடக்கூடும்.
நீங்கள் இது போன்ற பழக்க வழக்கங்களை பின்பற்றினால், அது கண்டிப்பாக வெற்றிக்கு ஒரு பாலமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, இத்தகைய பழக்க வழக்கங்களை உங்கள் காலை நேர வழக்கத்தில் புகுத்தி வெற்றிக்கான உங்கள் பயணத்தின் முதல் படியை இனிதே தொடங்குங்கள். வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment