RECRUITMENT OF ASSISTANT PROFESSOR: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆள்சேர்க்கையின் மூலம் மொத்தம் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக எதிர்வரும் 5ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்:
உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான கல்வித் தகுதிகள்:
முதுநிலை பட்ட மேற்படிப்பில் 55 சதவீதத்திற்கும் குறையாது மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; முன்னைவர் பட்டம் பெற்றவர்கள் (அல்லது) யுஜிசி மற்றும் சிஎஸ்ஐஆர் நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் (அல்லது) மாநில அரசுகளால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் தகுதி தேர்வில் (SLET) தேர்ச்சிப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மாநில அரசின் இடஒதுக்கீடு முறை பின்பற்றி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
ஏற்கனவே, பணியில் இருப்பின் (In- service candidates), துறை தலைவரால் வழங்கப்படும் "தடையின்மைச் சான்றை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்ப படிவத்தினை https://www.tndalu.ac.in/ என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேவைப்படும் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களையும், தேவையான இதர ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,180 ஆகும். பட்டியல் கண்ட சாதிகள், பட்டியல் கண்ட பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 590 செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை The Registrar, the Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai – 600 028” என்ற பெயரில் காசோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment