மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (சென்னை தெற்கு) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிட விவரம்: 1 அலுவலக உதவியாளர்.
இனசுழற்சி அடிப்படையில் இந்த பதவிக்கு பட்டியல் இனத்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.07.2023 அன்று விண்ணப்பதாரர் வயது வரம்பு 18-37க்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விகிதம்: Basic Pay Rs.15,700/- + DA + HRA
முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.35/-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் பதிவுத் தபால் மூலமாக 8.5.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி;
தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
தேர்வாணையச் சாலை,
வ.உ.சி.நகர், பூங்கா நகரம்.
சென்னை (தெற்கு) .
நேர்முகத் தேர்வு குறித்த தகவல் தபால் மற்றும் அலைபேசி எண் (அ) மின்னஞ்சல் (அ) வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்படும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment