Search

வெயில் கொளுத்த தொடங்கிடுச்சு.. தினமும் இந்த 8 உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க.!

 கோடைக்காலம் வந்தாலே வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். அதிலும் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக கடுமையான உஷ்ண அலையுடன் கூட வெப்பம் அதிகமாகவுள்ளது. இந்த நாட்களில் உங்களது உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்வது அவசியம். இதனால் அதிகளவு தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்வது போன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள்.

இவ்வாறு உங்களது உடலை நீரேற்றமாக நீங்கள் வைத்துக்கொள்வது ஒருபுறம் இருந்தாலும், உங்கள் வயிற்றையும் நீங்கள் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் அதிக வெப்பம் உங்களது செரிமான அமைப்பில் பல பிரச்சனைகளை ஏற்படும். உடலில் அதிக நீரிழப்பு, மலச்சிக்கல், வயிறு வீக்கம் மற்றும் இரைப்பை போன்ற குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே இதுப் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க வேண்டும் என்றால் கோடைக்காலத்தில் சில உணவுகளை கட்டாயம் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதோ என்னென்ன? என்று இங்கே அறிந்துக்கொள்வோம். உங்கள் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்:

தர்பூசணி : அதிக நீர்ச்சத்து பழமான தர்பூசணியை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, வெப்பத்தை எதிர்த்துப்போராடி உடலை குளிர்ச்சியாக மற்றும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. எனவே கோடையில் நீங்கள் அதிகமாக நீங்கள் சாப்பிடும் போது, உடலில் அதிக நீர் இருக்கும். இதனால் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதோடு மலச்சிக்கலுக்குத் தீர்வாக அமைகிறது. தர்பூசணியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும், ஆரோக்கியமான வயிற்றைப் பாதுகாக்க முக்கியமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை இந்தப் பழத்தில் ஏராளமாக உள்ளன.

வெள்ளரிக்காய் : கோடையில் அதிகளவில் நிலவும் வெப்ப அலையால், உங்கள் வயிற்றை எளிதாக வைத்திருக்க உதவுகிறது. இதில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக உள்ளது.

இளநீர் : கோடை வெயிலை சமாளிக்க இளநீர் ஒரு சிறந்த பானம். வெப்ப அலையின் போது உடலை நீரேற்றமாக இருக்க உதவும் எலக்ட்ரோலைட்டுகள் இதில் அதிகளவில் உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் வழக்கமான குடல் இயக்கத்தை பராமரிக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவுகிறது. லாரிக் அமிலம், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது.

தயிர் : தயிர் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுப் பொருள்கள் அதிக வெப்ப அலையின் போது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும். புரோபயாடிக்குகள் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் உங்கள் வயிற்றில் இருப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. கூடுதலாக, தயிரில் நிறைய கால்சியம் உள்ளதால் குடல் இயக்கங்களை அதிகரிக்கிறது.

மோர் : கோடை காலத்தில் உங்கள் குடலை எரிச்சலின்றி வைத்திருக்க விரும்பினால், உங்கள் தினசரி வழக்கத்தில் மோர் சேர்க்க வேண்டும். இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் செரிமான பிரச்சனைகளைத் தீர்வாக அமைகிறது. மேலும் இதில் புரோபயாடிக்குகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால், உடலின் வெப்பநிலையை இயல்பு நிலைக்குத் திரும்ப உதவியாக உள்ளது.

இஞ்சி : நமக்கு ஏற்படும் பெரும்பாலான வயிற்றுப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைவது இஞ்சி தான். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வெப்ப அலையின் போது உங்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய உதவியாக உள்ளது. மேலும் செரிமான பிரச்சனைக்குத் தீர்வாகவும் உள்ளது. எனவே இஞ்சியை நீங்கள் உங்களது உணவில் பல வழிகளில் சேர்த்துக்கொள்ளலாம்.

பப்பாளி : உங்களது செரிமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவும் பழங்களில் ஒன்றாக உள்ளது பப்பாளி. பாப்பைன் மற்றும் சைமோபாபைன் போன்ற புரதங்கள் உள்ளது. இதில் நார்ச்சத்து உள்ளது, இது வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

இதுப்போன்று முலாம்பழம், வெந்தயம் களி போன்றவற்றையும் உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளவும். நிச்சயம் கோடையில் உங்களது உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முடியும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment