நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் 1000க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர். பாரத ஸ்டேட் வங்கி (SBI)அல்லது வேறு ஏதேனும் அரசு வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி: 2023, ஏப்ரல் 30 ஆகும்.
காலியிடங்கள் விவரம்: மேலாளரின் உதவியாளர் (CMF- Channel Manager Facilitator ) பதவிக்கு 821 காலியிடங்களும், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் (CMS-AC - Channel Manager Supervisor ) பதவிக்கு 172 காலியிடங்களும், துணை அதிகாரி (SO-AC - Support Officer) பதவிக்கு 38 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், எந்தவித குறிப்பிட்ட கல்வித் தகுதியையும் கொண்டிருக்கத் தேவையில்லை. தொடர்புடைய துறைகளில் முன்னனுபவம் கொண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
பதவியில் கோரப்பட்ட முன் அனுபவம் அடிப்படையிலும், நேர்காணல் அடிப்படையிலும் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வது எப்படி, தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட தகவல்கள் அனைத்து விவரமாக ஆள்சேர்க்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள், அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Click here for latest employment news
No comments:
Post a Comment