Search

இந்தியாவில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க என்ன தகுதி வேண்டும்? முழுமையான விளக்கம்!

 யார் நினைத்தாலும் குழந்தையைத் தத்தெடுக்க முடியுமா, அவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், சட்டப்பூர்வமாக ஒரு குழந்தையை எப்படித் தத்தெடுப்பது என்பது குறித்து நம் வாசகர் கேட்ட கேள்விக்கான பதிலை, வழக்கறிஞர். பழனிமுத்து அவர்களிடம் கேட்டோம். அவர் கூறிய பதில் பின்வருமாறு:

Child Adoption in India
Child Adoption in India

1956 குழந்தை தத்தெடுப்புச் சட்டம் ஒன்று மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு, நாளடைவில் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க பல சீர்த்திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன. அதன்படி, குழந்தைகள் இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுக்க தம்பதியினருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்ற பட்டியல்:

1) கணவனும் மனைவியும் இணைந்து எந்தக் குழந்தையை வேண்டுமென்றாலும் தத்தெடுக்கலாம். ஆனால், கணவன் (ஆண்) பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது.

அப்படிக் குடும்பத்தினரின் விருப்பத்துடன் பெண் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினால் அவர்கள் தத்தெடுக்கும் குழந்தையைவிட அந்தக் குடும்பத் தலைவர் (கணவர்) 25 வயது மூத்தவராக இருக்க வேண்டும்.


2) 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது.


3) கணவன் அல்லது மனைவி இவர்களில் யாராவது 55 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் அவர்கள் இருவரின் வயதையும் சேர்த்துக் கூட்டினால் 110 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4) 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளை யார் வேண்டுமானாலும் தத்தெடுக்கலாம். ஆனால், 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பினால் குழந்தைகளின் ஒப்புதல் கேட்டு அவர்களின் விருப்பப்படியே தத்தெடுக்க வேண்டும்.


5) குழந்தையைத் தத்தெடுக்க விரும்புபவர்கள் அக்குழந்தையை வளர்க்கும் தகுதியைக் காண்பிக்கும் விதமாக அவர்களின் வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.


6) குழந்தை தத்தெடுப்பு ஆதார மையத்தில் குழந்தையைத் தத்தெடுக்க விரும்புபவர்கள் அங்கு பதிவு செய்ய வேண்டும். அங்கிருந்து இவர்களுக்கு குழந்தையைத் தருவார்கள்.

வருமான சோதனை, உடல்நல சோதனை (எய்ட்ஸ்) என அனைத்தும் சரிபார்த்தபின் நீதிமன்றதில் மனுப் போட வேண்டும். நீதிமன்றத்தில் 'In camera proceedings' நடைபெறும்.

அதன்பின் இருவரின் வாக்குமூலத்தையும் பெற்ற பின் அவர்களுக்குத் தத்தெடுப்புச் சான்றிதழ் நீதிமன்றத்தால் வழங்கப்படும்.

7) நீதிமன்றச் சான்றிதழ் பெற்ற பின் அவர்கள் குழந்தையை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்கள் குழந்தையாக வளர்க்கலாம்.


0 Comments:

Post a Comment