இப்போது இருக்கின்ற தலைமுறையினரை எல்லாம் பெற்றோர்களை விட சினிமா , டிவி , இணையம் தான் அதிகம் வாழ்க்கை முறையை , நிஜத்தைக் கற்றுக் கொடுத்து வளர்க்கிறது.
இந்த தலைமுறை குழந்தைகள் பிறக்கும் போதே ஃபோனோட பிறக்கவில்லை அவ்வளவு தான்.
சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின் முடிவின் படி நான்கு மாத குழந்தை ஒரு நாளுக்கு சராசரியாக ஆறு மணி நேரம் டிஜிட்டல் திரையைப் பார்க்கிறதாம்.
இல்லைப்பா நாங்க எல்லாம் என் பிள்ளைய அப்படி வளர்க்கவில்லை. டிவி , ஃபோன் எதுவுமே கொடுக்கமாட்டோம்னு சொல்ற பெற்றோர்க்கு ஒரு கேள்வி , தங்கள் குழந்தைகளை வெளியூரில் இருக்கும் உங்கள் சொந்தங்களிடம் காணொளி அழைப்பின் மூலம் காட்டுனதே இல்லையா? , இல்லை அவர்களின் சின்ன சின்ன அழகிய தருணங்களை புகைப்படம் , காணொளி பதிவு என எடுத்ததே இல்லையா?
எனக்கு தெரிந்து இதற்கு பெரும்பாலான பெற்றோர்களுக்கு பதில் கூற முடியாது, ஏன் நான் உட்பட.
ஏன், இந்த தகவல் எனக்கு தெரியும் முன்னர் நானும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று காணொளி அழைப்பு , தினமும் ஒரு புகைப்படமாவது சொடுக்கிக் கொண்டு தான் இருந்தேன்.
நன்கு முதிரச்சி அடைந்த விழித்திரையைக் கொண்ட மனிதர் ஒருவரே அடிக்கடி டிஜிட்டல் திரையைப் பார்த்தால் கண் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.
அப்படி பார்த்தால் இன்னும் வளரவே ஆரம்பிக்காத குழந்தையின் கண் பாவையின் (Retina) நிலை இத்தகைய டிஜிட்டல் ஒளிக்கற்றையால் என்ன ஆகும் என நினைத்துப் பாருங்கள்.
இதோ போன மாதம் எனது தோழியின் மருத்துவமனையில் பத்து வயது சிறுமி கண் எரிச்சல் , வெள்விழி படலம் சிவந்து போய் உள்ளது என்ற பிரச்சனையோடு வந்தாராம்.
ஏதோ சாதாரண அலர்ஜி பிரச்சனையாக இருக்கும் என பரிசோதனைகளைச் செய்தவர்களுக்கு கடைசியில் முடிவாக பெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.
டிஜிட்டல் ஒளி பட்டு பட்டு கண்ணின் உள் பகுதியில் புண் ஏற்பட்டு கடைசியில் அவரது பார்வை நரம்புகளை பாதித்து விட்டதாம். இனி அந்த சிறுமியின் பார்வைத்திறனை மீட்டுக் கொண்டு வர வழியில்லை. எனவும் அவருக்கு இப்போது மீதி இருக்கும் 20% பார்வைத் திறனை கெடாமல் பார்த்துக் கொள்வது அவர்களின் கைகளில் தான் உள்ளது எனவும் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்.
அந்த தாய் அழுத அழுகை பற்றி என் தோழி கூறிய போது சற்றே என் மனதில் கிலித் தோன்றியது உண்மை.
இப்போ இருக்கின்ற பிள்ளைகளுக்கு டிஜிட்டல் திரையைக் காட்டாமல் இருக்க முடியாது. ஏனெனில் அது அவர்களின் கல்வியிலும் ஒரு பகுதியாகி விட்டது.
சிறிய சிறிய மாற்றங்கள் செய்து அவர்களின் கண் பார்வையை காப்பாற்றலாம்.
கண்டிப்பாக இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அலைப்பேசியின் தொடுத்திரையில் உள்ள உருவம் தெளிவாக தெரியப் போவது இல்லை. அதை எதற்காக அவர்களின் முகத்தின் முன் காட்டி அவர்களுக்கு தொடுதிரையைப் பழக்கப்படுத்த வேண்டும். பேசாமல் பின் பக்க கேமராவின் வழியே அவர்களின் அசைவுகளையும் , அழகிய தருணங்களையும் உங்கள் சொந்தங்களிடம் காட்டினால் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் , நிச்சயம் உங்கள் பிள்ளைகளின் கண்களும் உங்களுக்கு நன்றி சொல்லும்.
புகைப்படம் , காணொளி பதிவு செய்யும் போதும் அப்படியே சுயப்படமாக அதிகம் எடுக்காமல் பின் பக்க கேமராவைப் பயன்படுத்தியே அவர்களின் இயல்பான அசைவுகளை எடுங்கள். முக்கியமாக Flash light பயன்படுத்த வேண்டாம்.
உணவு ஊட்டும் போது தயவு செய்து டிவியோ , ஃபோனோ வேண்டாமே! அது அவர்களின் பசியையும் கவனிக்க விடாது. உடலையும் , மனதையும் இரண்டையுமே பாதிக்கும். முடிந்த வரையில் வேறு எதாவது முறையில் முயற்சி செய்து பார்க்கலாமே.
கண்டிப்பாக இன்று டிவியோ , ஃபோனோ பார்த்தே ஆக வேண்டும் என்ற சூழலில் , ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் ஐந்து நிமிட இடைவேளி , அவ்வப்போது உள்ளங்கையை சூடுப்படுத்தி கண்களின் மீது வைத்து அதனை சாந்தப் படுத்தல் போன்றவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.
சித்திமும் கைப் பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் தானே
பழக்க பழக்க அவர்களே அதன் பகிமையைப் புரிந்துக் கொள்வார்கள்.
-Dr.Thabu
0 Comments:
Post a Comment