Search

கோடை வெப்பத்தை தணிக்க மட்டுமல்ல இளநீர்... இந்த நன்மைகளுக்காவும் தினமும் குடியுங்கள்..!

 இந்தியாவில் ஏற்கனவே கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் மக்கள் அனைவரும் சூரியனின் வெப்ப அலைகளில் இருந்து தங்களை பாதுகாக்க என்த்னென்னவோ வழிமுறைகளை பின்பற்ற துவங்கி விட்டனர். இந்திய ஆய்வு மையமும் கோடை வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான வழிமுறைகளை பின்பற்றுமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளது. சில இடங்களில் 40லிருந்து 45 டிகிரி செல்சியஸ் வரை கூட வெப்பம் அதிகரிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதே சில இடங்களில் மேலே சொன்ன வெப்பநிலையை விட அதிக வெப்பத்தை உணரமுடிகிறது.

இது போன்ற சூழ்நிலையில் அதீத வெப்பத்தினால் உடலில் நீர் சத்து குறைவதும், உடல் சூடு அதிகரிப்பதும் இயல்பான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகம் இருக்கும் சமயங்களில் இலகுவான காற்றோட்டம் உள்ள ஆடைகளை உடுத்திக் கொள்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நம்மால் தப்பிக்க இயலும். அதே சமயம் கோடைகாலங்களில் நமது உணவு பழக்கத்தில் கவனம் செலுத்துவதும் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.

வெப்பத்தை தணிக்கும் வகையில் குளுமையான உணவு பொருட்களையும் நீராகரங்களையும் நாம் உட்கொள்ள வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிப்பது, இளநீர் மற்றும் மற்ற நீராகாரங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பத்தை தணிக்கக இயலும். இவை மட்டுமின்றி இளநீர் குடிப்பதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

எலக்ட்ரோலைட்டுகள் : இளநீரில் பொட்டாஷியம், சோடியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இந்த எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்கள் உடலில் நீர் சத்து குறைவதை தடுப்பதோடு உடல் வெப்பத்தையும் குறைக்க உதவுகிறது. உடலில் நீர் சத்து குறைவதால் ஏற்படும் மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படாமலும் நம்மை பாதுகாக்கிறது.

நீர்ச்சத்து : போதுமான அளவு இளநீர் பருகும் போது, கோடையில் அதிக வெப்பத்தினால் நமது உடலிலிருந்து வியர்வையாக வெளியேறும் நீர் சத்தை சமன் செய்ய உதவுகிறது. மேலும் தற்போது சந்தைகளில் கிடைக்கும் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை கலந்த குளிர்பானங்களுக்கு மிகச்சிறந்த மாற்றாகவும் இளநீர் அமையும்.

குளிர்ச்சித் தன்மை : கோடை காலங்களில் போதுமான அளவு இளநீர் குடிப்பதால் அது உடலின் வெப்பத்தை குறைத்து குளுமையை தருகிறது. முக்கியமாக உடல் சூடு அதிகமுடையவர்கள் இளநீரை அதிகம் பருகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊட்டச்சத்துக்கள் : இளநீரில் கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலின் அழற்சி தன்மையை குறைக்க உதவுகிறது.

குறைவான கலோரிகள் : இளநீரில் கலோரிகள் குறைவாகவும் அதே சமயத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் நிறைந்துள்ளது. அதன் காரணமாக உடலுக்கு அதே சக்தியை தருவதோடு மிகுந்த ஆரோக்கியத்தையும் தருகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment