திருநெல்வேலியில் பெண்களுக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் டாட்டா பவர் ரெனிவபில் எனர்ஜி நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி சோலார் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பெண்களுக்கென மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இம்மாதம் 29ஆம் தேதி காலை 9 மணி முதல் பாளையங்கோட்டை சாராள் தக்கர். மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள டிபி சோலார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புக்காக பிரத்தியமாக நடத்தப்படுகிறது இந்த நிறுவனம் இந்த முகாமில் 1,600 க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்ய உள்ளது 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ பாலிடெக்னிக் பிஇ முடித்த பெண்கள்அல்லது இறுதி ஆண்டு மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
விரும்பம் உள்ள பெண்கள் http://surl.li/gllsy என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவிடலாம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த ஆறு முதல் பத்து மாதங்களில் படிப்படியாக பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது இது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று நமது மாவட்டத்திலேயே ஒரு பெரு நிறுவனத்தில் பணி புரியும் வாய்ப்பை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment