பசுமை, அமைதி, சுத்தமான காற்று இதெல்லாம் வேண்டுமா..? இந்தியாவில் உள்ள இந்த இடங்களுக்கு சென்று வாருங்க..! - Agri Info

Adding Green to your Life

April 14, 2023

பசுமை, அமைதி, சுத்தமான காற்று இதெல்லாம் வேண்டுமா..? இந்தியாவில் உள்ள இந்த இடங்களுக்கு சென்று வாருங்க..!

 காற்று மாசுபாடு இல்லாத நகரை பார்ப்பது மிகவும் அரிதான விஷயங்களாக மாறிவிட்டது. காற்று மாசுபாடு என்பது 2 ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் கட்டுரை அல்ல, இந்தியாவில் காணப்படும் பல நோய்களுக்கு முக்கிய காரணம். நாம் அனைவருக்கும், இந்த இயந்திர வாழ்க்கையில் இருந்து ஏதாவது அமைதியான மற்றும் பசுமை நிறைந்த கிராமங்களுக்கு செல்ல ஆசை இருக்கும். அப்படி நினைக்கும் போது எல்லாம், நமது நியாபகத்திற்கு வருவது கேரளா மட்டும் தான். காற்றுத் தர குறியீடு (AQI) அளவை பொறுத்து ஒரு நகரத்தின் பசுமை நிலை அளவிடப்படுகிறது. அந்த வகையில் AQI அடிப்படையில் மிகவும் குறைவான காற்று மாசு கொண்ட இந்தியாவின் ஒரு சில நகரங்கள் பற்றி பார்க்கலாம்.

​ராஜமன்றி : ராஜமன்றி ஆனது ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரமாகும். கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கரத்தின் AQI அளவு ஆனது 18-ஆக உள்ளது.

அய்சால் : மிசோரத்தின் தலைநகராக இருக்கும் அய்சால், இதன் தட்பவெட்ப நிலை மற்றும் பசுமை தோற்றத்திற்கு பெயர் பெற்றது. சுத்தமான சுற்றுச்சூழலுக்கு அடையாளமாக உள்ள இந்த நகரத்தின் AQI அளவு ஆனது 20-ஆக உள்ளது.

சில்லாங் : வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ள சில்லாங், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1525 மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். பிரம்மபுத்திரா ஆறு மற்றும் சுர்மா ஆறுகளிடையே அமைந்துள்ள இந்த நகரத்தின் AQI அளவு ஆனது 21-ஆக உள்ளது.

அமராவதி : தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவின் தலைநகராக கருதப்படும் அமராவதி, கிருஷ்ணா நதிக்கரையின் தென்கரையோரம், விஜயவாடா, குண்டூர் நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது. இந்நகரின் AQI அளவு ஆனது 28-ஆக உள்ளது.

ஹவுரா : ஹவுரா, மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொழில்துறை நகரம் ஆகும். ஹவுரா ஊக்லி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள இந்த நகரத்தின் AQI அளவு ஆனது 28-ஆக அளவிடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் : கேரளாவின் தலைநகராக உள்ள திருவனந்தபுரம் இந்தியாவின் மிகவும் பசுமையான நகரம் என அறியப்படுகிறது. பார்க்கும் இடம் எல்லாம் நீர் நிலைகள் நிறைந்து காணப்படும் இந்த நகரத்தின் AQI அளவு ஆனது 30-ஆக உள்ளது.

மடிகேரி : கர்நாடக மாநிலத்தின் குடுகு மாவட்டத்தில் அமைந்துள்ள மடிகேரி, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1170 மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரத்தின் AQI அளவு ஆனது 30-ஆக உள்ளது.

ஹாசன் : கர்நாடக மாநிலத்தின் மற்றொம் ஒரு பசுமையான நகரமாக ஹாசன் உள்ளது. இந்த நகரத்தின் AQI அளவு 30-ஆக இருக்கும் அதே நேரம், இந்த நகரம் பிரபலமான பேக்கரிகள் நிறைந்த ஒரு நகரமாகவும் உள்ளது.


No comments:

Post a Comment