நம்மில் பலருக்கு தினமும் டீ அல்லது காபி அருந்துவது வழக்கம். ஆனால், டீ அல்லது காபிக்கு பதிலாக கிரீன் ஜுஸ் எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது. இது நம் உடலில் உள்ள தேவை இல்லாத கழிவுகளை நீக்க உதவும் ஒரு மெட்டபாலிசம் பூஸ்டர் ஆகும். இதன் பெயர் குறிப்பிடுவது போல, இதனை பச்சைக் நிறத்தில் உள்ள காய்கறிகள் கொண்டு நாம் தயாரிக்க வேண்டும்.
சிறந்த மெட்டபாலிசம் பூஸ்டர் : உங்கள் மெட்டபாலிசம் அதாவது வளர்சிதை மாற்றம் சற்று பொறுமையாக செயல்படுவது போல் நீங்கள் உணர்ந்தால் அல்லது நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் தினசரி உணவில் ஒரு கிளாஸ் கிரீன் ஜுஸை சேர்த்துக் கொள்ளலாம். ஃப்ரெஷ் ஆன கிரீன் ஜுஸில் உள்ள சில கலவைகள் ப்ரீபயாடிக்குகளாக செயல்படுகிறது. இது உங்கள் செரிமான மண்டலத்தில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
இது எடை இழப்புக்கான ஒரு பிரபலமான டிரிங் என்றும் சொல்லலாம். கடைகளிலும் கிரீன் ஜுஸ் தற்போது விற்கப்படுகின்றன. இருப்பினும், நீங்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவற்றில் சர்க்கரை அதிகமாக சேர்க்கப்பட்டு இருக்கலாம். ஆதலால், இது எடை அதிகரிப்புக்கு காரணமாகி விடக் கூடும்.
No comments:
Post a Comment