பழங்கள் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய உடல் நலத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்று தான். இருந்தப்போதும் உணவிற்கு முன்னதாகவா? உணவிற்கு பின்பு சாப்பிட வேண்டுமா? அல்லது இதை ஒரு நேர உணவாக மட்டும் எடுத்துக்கொள்ளலாமா? என்ற சந்தேகம் நிச்சயம் எழக்கூடும்.
இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கட்டுக்கதைகள் மற்றும் சில உண்மைகளைக் கூறுவார்கள். இதோ இன்றைக்கு பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்றும் பழங்கள் சாப்பிடுவது குறித்து இதுவரை உள்ள கட்டுக்கதைகள் குறித்தும் அறிந்துக் கொள்வோம்.
பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்? சுகாதார நிபுணர்களின் கருத்தின் படி, காலையில் நீங்கள் பழங்கள் சாப்பிடுவது உங்களின் சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது. ஒருவேளை நீங்கள் உணவின் போது பழங்களை சாப்பிட்டால் செரிமானத்தில் பிரச்னை ஏற்படுகிறது. ஆம் சில பழங்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உணவில் சேர்த்து கொள்ளும் போது வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. இதோ இவற்றில் எது உண்மை என்ற விபரம் இங்கே.
உணவு நேரத்திற்கு அருகில் பழங்களை சாப்பிடக்கூடாது என்ற கூற்று கட்டுக்கதை என்று கூறுகின்றனர் சுகாதார நிபுணர்கள். நீங்கள் சாப்பிடும் நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக பழங்களை சாப்பிடுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இது செரிமானத்தை சிறிது குறைக்கிறது. நீங்கள் பழங்களை அதிகாலையில் சாப்பிடுவது சிறந்தது என்று கூறினாலும் அல்லது உணவுக்கு இடையில் சாப்பிடுவது தான் சிறந்தது என்று கூறினாலும் சரி முதலில் உங்களது உடல் ஆரோக்கியம் எப்படி உள்ளது என நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். ஆம் உங்களுக்கு குடல் சம்பந்தமான பிரச்சனைகள் இல்லை என்றால் பழங்களை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் எவ்வித தீங்கும் இல்லை.
பழங்கள் மற்றும் உலர்ந்த பழங்கள் ஒன்றுதான் என்று கூறுவது தவறானது. ஆம் நீண்ட கால பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்படும் எதுவும் புதியதைப் போன்று அதே ஊட்டச்சத்துக்களை தக்க வைத்துக்கொள்ளாது. இந்த கூற்று பழங்களுக்கும் பொருந்தும். இன்றைக்கு சந்தைகளின் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, பல பிராண்டுகள் உலர் பழங்களை விற்பனை செய்கின்றன. எனவே முடிந்தவரை ப்ரஷ்ஷான பழங்களை சாப்பிடுவது நல்லது.
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தவறான கருத்து. பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கிறது என்பது உண்மை தான். ஆனாலும் சர்க்கரை அளவை மாற்றுவதில் பழங்களின் பங்கு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. பெரும்பாலான பழங்கள் கிளைசெமிக் குறியீட்டின் கீழ் அவை உங்கள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயாளிகள் பழங்களில் உள்ள சர்க்கரையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான முறையில் பழங்களை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து, ஃபிட்டர்ஃபிளையின் வளர்சிதை மாற்ற ஊட்டச்சத்து தலைவர் ஷில்பா ஜோஷி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன் படி, "நீரிழிவு உள்ளவர்களுக்கும் பழங்கள் நல்லது, மாம்பழங்களை ரொட்டி, சாப்பாடு, அல்லது உருளைக்கிழங்கு போன்ற பிற கார்போஹைட்ரேட்டுகளுடன் சாப்பிடக்கூடாது. ஆனால் அதற்கு மாற்றாக பாதாம், அக்ரூட் மற்றும் நட்ஸ்களுடன் சேர்த்து சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். இதுபோன்று தான் பிற பழங்களும். எனவே, அளவுக்கு மீறாமல் சாப்பிடுவது நல்லது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
0 Comments:
Post a Comment