Search

சென்னைக்கு அருகே குறைந்த பட்ஜெட்டில் செல்ல ஒரு அட்டகாசமான அருவி.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஸ்பாட்..!

சென்னையில் இருந்து 70கிமீ தொலைவில் ஆந்திர பகுதியில் அடர்ந்த காடுகள், தெளிந்த நீரோடை, அள்ளித்தெளிக்கும் நீர்வீச்சி என்று இயற்கையின் மடியில் சுகமாக உலாவர ஏற்ற இடமாக நாகலாபுரம் உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில அழகிய ஆரே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

நாகலாபுரம் பகுதியில் மொத்தம் 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகளுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு சுற்றுலா சென்ற சிலர் நீர்வீழ்ச்சியில் சிக்கி மரணமடைந்தனர். மக்கள் நீர்வீழ்ச்சியில் குளிக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால்,  அனைத்தும் மூடப்பட்டது. அதன் பின்னர் தற்போது பாதுகாத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு  வனத்துறையினர் உதவியோடு நீர்வீழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது.நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரே குறை என்னவென்றால் இந்த இடத்திற்கு பொதுப் போக்குவரத்து வசதி எதுவும் இல்லை. தனியார் வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். பைக், கார் பார்க்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வாகனத்துக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை அனுமதி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது போக நுழைவுக்கட்டணமாக  ரூ.50  வசூலிக்கப்படுகிறது. ஆனால் காலை முதல் மாலை வரை குடும்பத்துடன் கொண்டாட ஏற்ற ஸ்பாட்டாக இது இருக்கும்.
ட்ரெக்கிங் செல்ல விரும்புபவர்களும் இந்த ஸ்பாட்டை தேர்ந்தெடுக்கலாம் ஏனென்றால் பார்க்கிங் முதல் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுமார் 1 முதல் ஒன்றரை கிலோமீட்டர் நடந்தே பயணம் செல்ல வேண்டும்.

இந்த நாகலாபுரம் அருவியில் மொத்தம் 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளது. பாதுகாப்பு கருதி முதல் நீர்வீழ்ச்சிக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 2 மற்றும் 3ஆவது நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக நீரில் விளையாட லைப் ஜாக்கெட்டும் வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு நபருக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment