திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட வன பயிற்சிநர் (district resource person) திறன் வளர்ப்பு பயிற்சி பிரிவு (IB&CB)என்ற ஒரு தற்காலிக பணியிடத்திற்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது இதன் மூலம் பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள் முன்னுரிமை ஏதும் கோர இயலாது என்று தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இதில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduation, Master Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும் . தகுதி இல்லாத மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
No comments:
Post a Comment