உங்கள் 20, 30 மற்றும் 40 வயதுகளில் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முக்கியமான மருத்துவ பரிசோதனைகள்.! - Agri Info

Adding Green to your Life

April 14, 2023

உங்கள் 20, 30 மற்றும் 40 வயதுகளில் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய முக்கியமான மருத்துவ பரிசோதனைகள்.!

 வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை கடந்த சில வருடங்கள் நமக்குக் காட்டுகின்றன. தொற்றுநோய்க்குப் பின் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள். குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ளக மருத்துவத்தின் கூடுதல் இயக்குநர் டாக்டர் பேலா ஷர்மா "சோதனைகளை செய்துவிட்டு, கூகுளின் மூலமாக சுய மருந்துகளைத் தொடங்குவது மட்டும் போதாது" என்று எச்சரிக்கிறார்.

சிகே பிர்லா மருத்துவமனையின் உள் மருத்துவத்தின் ஆலோசகர் டாக்டர் துஷார் தயல் வயதாகும்போது, ​​நமது நோயெதிர்ப்பு சக்தியும், குணமடையும் திறனும் குறைந்துவிடுகிறது.மருத்துவ ஆலோசனையைப் பெறுவதும், ஆரோக்கியமாக இருக்க சில மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதும் இன்றியமையாததாகிறது என்று குறிப்பிடுகிறார்.

இந்த உலக சுகாதார தினத்தில், நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

உஜாலா சிக்னஸ் குழும மருத்துவமனைகளின் நிறுவனர் இயக்குநர் டாக்டர் ஷுச்சின் பஜாஜ் "20, 30 மற்றும் 40 வயதிற்குட்பட்ட நபர்களுக்குத் தேவையான சோதனைகள் வயதிற்கு ஏற்ப மாறுபடலாம், எனவே தனிப்பட்ட பரிந்துரைகளுக்கு மருத்துவரை அணுகுவது அவசியம்" என்று குறிப்பிடுகிறார்.

20 வயதில் தடுப்பு சுகாதாரம் முக்கியமானது:

  

"வழக்கமான இரத்த பரிசோதனைகள், கொலஸ்ட்ரால் ஸ்கிரீனிங் மற்றும் இரத்த அழுத்த சோதனைகள் எதிர்கால உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவும். கூடுதலாக, பாலியல் தொடர்பாக எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய ஏதேனும் தொற்றுகளை அடையாளம் காண STD பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்,” என்று டாக்டர் பஜாஜ் விளக்குகிறார். பிரயாக் மருத்துவமனைகள் குழுமத்தின் ஆலோசகர் ICU ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் தருண் பாண்டே, முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.

"பெண்களுக்கு, ஹீமோகுளோபின் அளவு பொதுவாக தன்னுடைய ஆரோக்கியத்தைப் பற்றி கவனிக்காமல் விடுவதால் ஏற்படுகிறது. அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு மற்றும் உணவு முறை மற்றும் பல காரணங்களால் இது குறைவாக இருக்கலாம். சிபிசி பரிசோதனை ஹீமோகுளோபின், வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை (நோய் எதிர்ப்பு சக்தி அளவைப் பற்றி கூறுகிறது) மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கை ஆகியவற்றை சரிபார்க்க உதவுகிறது.

பெண்களுக்கான மற்றொரு முக்கியமான சோதனை இரும்புச் சத்து சோதனை. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, பெண்கள் பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாட்டுடன் காணப்படுகிறார்கள். சீரம் ஃபெரிடின் என்பது உடலில் இரும்புச் சேமிப்பைக் கண்டறியும் மற்றொரு சோதனை என்கிறார் டாக்டர் பாண்டே

வைட்டமின் D மற்றும் B12 ஆகியவை எலும்பு ஆரோக்கியம், நரம்பு செயல்பாடு மற்றும் இரத்த சிவப்பணு உற்பத்தி என பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

மேலும் டாக்டர் பாண்டே 20 வயது உடையவர்களுக்கு தைராய்டு ஹார்மோனின் அளவை கண்டறிவதற்கான ஹைப்போ தைராய்டிசம் அல்லது TSH சோதனைகளைப் பற்றி கூறுகிறார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டால் எந்த பிரச்சனையும் தீர்க்கலாம் என்றும் விளக்குகிறார்.

30களில் எடுக்கப்பட வேண்டிய சோதனைகள்:

30 களின் முற்பகுதியில் மேற்கூறிய சோதனையுடன், சர்க்கரை பரிசோதனையும் (சாப்பிடும் முன் மற்றும் சாப்பிட்ட பின்பு இரண்டும்) இன்றியமையாதது.

பெண்கள் மார்பக அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெண்கள் 40 வயது வரை, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கண் மற்றும் பற்களை பரிசோதனை செய்ய வேண்டும்.

டாக்டர்.பஜாஜ் “பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய பாப் ஸ்மியர் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். புற்றுநோயின் குடும்ப வரலாற்றைக் கொண்ட நபர்களுக்கு, மரபணு சோதனை செய்து கொள்வதும் முக்கியமானதாகும் என்று விளக்குகிறார்.

40 வயதில் சுகாதார பரிசோதனைகளை புறக்கணிக்காதீர்கள்:

40 களின் முற்பகுதியில், KFT- சிறுநீரக செயல்பாடு சோதனை, LFT கல்லீரல் செயல்பாடு சோதனை, ECG மற்றும் மார்பக எக்ஸ்-ரே ஆகியவை இதய அபாயம் மற்றும் நுரையீரல் நிலையை ஆரம்ப நிலையிலேயே கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும்" என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

புரோஸ்டேட்-குறிப்பிட்ட ஆன்டிஜென்: ஆண்கள், குறிப்பாக குடும்பத்தில் புரோஸ்டேட் புற்றுநோயைக் கொண்டவர்கள், புரோஸ்டேட் புற்றுநோயைக் கண்டறிய இந்த இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

மேமோகிராம்: மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

டாக்டர்.சஞ்சய் குப்தா, மூத்த ஆலோசகர்- உள் மருத்துவம், பாராஸ் ஹெல்த், குருகிராம் அவர்கள் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு இன்னும் சில முக்கியமான சோதனைகளைக் குறிப்பிடுகிறார்:

கொலோனோஸ்கோபி : 

மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்கு CT ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. கருப்பை, கணையம், குடல், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றைப் பரிசோதிக்க வேண்டும்.

இவை அனைத்துமே பொதுவான வழிகாட்டுதல்கள் ஆகும். அவரவர் சூழ்நிலைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஏற்ப இந்த பரிசோதனைகள் மாறுபடும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment