மகளிர் நலனை பொருத்தவரையில், அலட்சியப் போக்குடன் கைவிடப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக ஊட்டச்சத்து உள்ளது. நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், அதன் மூலமாக எவ்வளவு சத்து கிடைக்கிறது என்பதை கண்காணிக்கிறீர்களா? நிச்சயமாக இருக்காது. ஆனால், என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில், யுனிசெஃப் அமைப்பு, இந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான வளர் இளம் சிறுமிகள் மற்றும் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு என்பது பிரதான பிரச்சனையாக இருக்கிறது.
பெண்களுக்கு முக்கியத்துவம் ஏன்?
ஊட்டச்சத்து என்று வருகின்றபோது பெண்களின் நலன் குறித்துதான் அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வளர் இளம் சிறுமிகள் பலவீனம் அடைகின்றனர் மற்றும் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால், கர்ப்பம் மற்றும் பிரசவம் போன்ற சமயங்களில் மிகுந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
கர்ப்ப காலத்தில் போதுமான ஊட்டச்சத்து மற்றும் விட்டமின்கள் போன்றவை கிடைக்காத காரணத்தால் குறைப்பிரசவம் மற்றும் உடல் எடை குறைவான குழந்தை என்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்துடன் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச்சோகை போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
உலகெங்கிலும் உள்ள பெண்களைப் போலவே இந்திய பெண்களின் நிலைமையும் சற்று மோசமாக இருக்கிறது. இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றில் ஒரு பங்கு பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதி அடைகின்றனர். நான்கில் ஒரு பங்கு பெண்கள் அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
சீரான உணவு :
பருப்பு, தானியங்கள், சிறுதானியங்கள், முட்டை, இறைச்சி, மீன், பால், பால் சார்ந்த பொருட்கள், அனைத்து வகை காய்கறிகள், பழங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த சீரான உணவுகளை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும், மிக முக்கியமாக என்னென்ன சத்து தேவைப்படும் என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment